பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடககு முறை

முதன்முதல் மகாராஷ்டிரத்தில் வந்த “பிளேக் பரவிய போது அதிகாரிகளின் வரம்பு மீறிய செயல்களை மக்கள் கண்டித்தனர்; ஒரு தீர்வும் காணாததால் மக்கள் வெகுண்டெழுந்தனர்; எழுச்சி! மக்கள் எழுச்சி! மாநிலம் எங்கும் மக்கள் எழுச்சி! அரசாங்கம் சும்மா இருக்குமா?

எழுச்சியை அடக்கக் கொண்டு வந்தது அடக்குமுறை.

அதிகார வர்க்கம் முதன்முதல் விதித்த அடக்குமுறை இதுவே.

அடுத்த முக்கியமான அடக்குமுறை கர்ஸான் பிரபு காலத்தில் ஏற்பட்டது. ஹிந்து முஸ்லீம்களை பிரித்தாளும் திட்டமாக வங்கம் துண்டாடப் பட்டது. 1903-1905 அக்டோபர் வரை நாடு முழுவதும் கர்ஸானின் யதேச்சாதி காரத்தை எதிர்த்தது.

திலகர் காசி காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு புத்துணர்வைத் தூண்டினார். தீவிர கட்சி உருபெற்றது. எங்கும் ‘வந்தே மாதரம்! முழக்கம்! சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை!’ என்ற கோஷம். எது செய்தாலும் அடங்காது அலை மேல் அலையாக வந்த சுயராஜ்ய வேட்கை; சுதேசியமே விசுவ ரூபமெடுத்ததென நாடெங்கும் சுதேசியக் கிளர்ச்சி; அன்னிய பொருட்கள் தீவிர பகிஷ்காரம்: ஆங்கிலேயர் இது கண்டனர்; சிலர் அஞ்சினர். வேறு சிலரோ எள்ளி நகையாடினார்.

எதுவரை?

தாதாபாய் நவ்ரோஜி, சுயராஜ்ய ஒலியை எழுப்பும் வரை ;

1907-ல் காங்கிரஸில் மிதவாதி தீவிரவாதி பிரிவு, பிளவு வரும் வரை;

பின் என்ன செய்தது?.

1 55