பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துள் சுய ஆட்சி பெற இந்தியா எல்லா வழியிலுந் தகுதியுடையதாயிருக்கிறது. அதைப் பெறுவதற்கு இதுவே காலம்’ என்றார்.

சுரேந்திரநாத் பானர்ஜி, மாளவியா ஆகியோர் இக்கருத்தை ஊர்ஜிதப்படுத்தினர்.

எல்லாவற்றிலும் காங்கிரஸும் முஸ்லீம் லீக்கும் ஒன்று பட்டே செயல்பட்டன. இவ்விரண்டும் ஒற்றுமையாகவே இருந்து விட்டால், அவ்வொற்றுமை சுயராஜ்யத்திற்கு வழிகோலும் அன்றோ? உடன் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டது அதிகார வர்க்கம்.

பெஸண்ட் அம்மையாரிடமும் திலகரிடமும் ஈடுகாணம் கேட்டது. ஆனால் ஈடுகாணம் கட்டப்பட்டதா? இல்லை. நேர்மை வென்றது! பம்பாய் ஹைகோர்ட் இந்த ஈடு காணத்தை தடை செய்தது. உரிமைக் குரல் ஓங்கியது. அடக்குமுறை அசைக்கப்பட்டது.

இலட்சுமணபுரி காங்கிரஸில் மிதவாதி, தீவிரவாதி வேற்றுமையைப் போக்கினார் திலகர். ஒற்றுமை நிலவியது. இலட்சுமணபுரி காங்கிரஸில்தான் சுய ஆட்சித் தீர்மானம் நிறைவேறியது.

1917-ம் ஆண்டு ஜூன் மாதம் பெஸண்ட் அம்மையாரை காப்பில் (வீட்டு காவலில்) வைத்தது. ஏன்? சட்ட வரம்புக் குட்பட்ட கிளர்ச்சியை நடத்தினார். அது தவறாம். எனவே காவலில் வைக்கப்பட்டார்.

இதற்கு எதிரொலியாக எங்கும் எதிர்ப்பு, நாடெங்கும் எதிர்ப்பு. மக்கள் மனத்தில் கொதிப்பு: கொந்தளிப்பு!

விளைந்த பயன் என்ன?

மூன்று மாதத்திற்குள் அம்மையார் விடுதலையடைந் தார். அம்மையார் கோரிய பொறுப்பாட்சி உறுதிமொழி அரசாங்கச் சார்பில் பார்லிமெண்டில் பிறந்தது.

55