பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை உலகே அறியா பச்சிளங் குழவிகள் எத்தனை எத்தனை! எவ்வளவு கொடுமை!

அடுத்தடுத்து ரெளலட் சட்டம், பஞ்சாப் படுகொலை! கிலாபத் இயக்கத்துக்கு நியாயம் பிறக்காதது-ஆகிய எல்லாச் சம்பவங்களும் சுயராஜ்ய வேட்கையை எழுப்பின.

நாட்டு வாரம் கொண்டாட மகாத்மா எண்ணங் கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஆறாம் நாள்ரெளலட் சட்டத்தின் ஆற்றலை வீழ்த்திய நாள் முதல் பஞ்சாப் படுகொலைநடந்த ஏப்ரல் பதிமூன்றாம் தேதிவரை உள்ள ஒரு வாரமே நாட்டு வாரமாகும்.

இந்த வாரத்தைக் கொண்டாடுவதற்கு வேண்டிய

தகுதிகளையும்-முறைகளையும் காந்தியடிகள் தம் அறிக்கை களில் வெளியிட்டார்.*

1919

மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தம் பார்லிமெண் டில் நிறைவேறியது.

இரட்டை ஆட்சி முறை இந்தச் சீர்திருத்தத்தில் இடம் பெற்றது. இந்தியாவின் உரிமை வேட்கைத் தீயை இது தணித்ததா? இல்லை, இல்லை!

அமிர்தசரஸில் முப்பத்து'நாலாவது காங்கிரஸ் கூடியது. தலைவர் பண்டித மோதிலால் நேரு.

இக்கூட்டத்தில் திலகர் பெருமான் பொழிந்த சொன்மாரி மக்களை சிந்திக்க செய்தது. சுயராஜ்ய வேட்கையை அதிகரித்தது. அவர் என்ன சொன்னார்?

  • 10-3-1920-காந்தியடிகளின் அறிக்கை-1, பக். 311, 312-இந்திராவும் விடுதலையும் பக். 313314-அரசியல்-பொருளாதாரம், இ ந் தி ய ா வு ம் விடுதலையும்.

1 6 1