பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றுமையின் வெற்றி!

விசாரணைக் குழு அமைக்கும் எண்ணம் கைவிடப் பட்டது.

‘இது தொழிலாளர் ஒற்றுமையிள் வெற்றி!

தொழிலாளர் பலத்தின் எதிரொலி: தொழிலாளர் சமதர்ம கொள்கையின் தீர்வு!’

என்று பெருமிதங் கொண்டார் திரு. வி. க.

பக்கிங்காங் மில் சம்பவம்

பக்கிங்காம் மில்லில் 20.10-20 நடந்த ஒரு சிறு சம்பவத்தைப் பற்றிக் கூறுகிறார் திரு. வி. க. அதன் விளைவையும் விவரிக்கிறார்.

இதைப் படிக்கும் போது திரு. வி. கவின். சலியா உழைப்பு பளிச்சிடுகிறது. மக்கள் சக்தியை பயன்படுத்திக் கொண்டு அவர் தம் சுய முன்னேற்றத்திற்கு அடிகோலி யிருக்கலாம். ஆனால், அப்படி இருப்பின், அவரை வையம் ‘தன்னலமற்றவர் என்று கை கூப்புமோ?

தொழிலாளர் பக்கம் நின்றதால் அவர்க்கு பிறப்பிக்கப் பட்ட தடைகள் எத்தனை?

பஞ்சாயத்து ஏற்பட்டதே, அதில் ஏற்பட்ட எதிர்பாரா திருப்பங்கள்; அதனால் அவர் பட்ட வேதனைகளை அறிந்தால் கல்லும் சிந்தாதோ கண்ணிர்! இதைக் கூற அவர் தம் எழுத்தே தவிர வேறேதும் பொருந்தாது.

‘நவசக்தி’ யில் அவர் எழுதிய ஆசிரியக் கட்டுரை உண்மை நிலையை அனைவருக்கும் தெளிவாக்கியது. அந்த மாபெரும் பிரச்சினையை எவ்வளவு தெளிவாகத் தமிழ் அண்ணல் தீர்த்து வைத்தார் என்பதை வியப்புடன் பார்க்கிறோம்,