பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழம் பெரியதொரு நாடான இந்தியாவின் வரலாற்றைப் படித்தவர், கேட்டவர் அனைவரும் அதன் பெருமை புன்னி யுன்னி பெருமிதம் கொள்ளும்படியும், அடிமை மோகத்தை விலக்கவும் கலங்கரை விளக்காக நம் நாட்டை காட்டினார் திரு. வி. க. இது அவர்தம் தாய் நாட்டுப்பற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டன்றோ?

தற்கால இந்தியாவின் நிலையை அவர் போன்ற ஆய்ந் தறிந்த அறிஞர் வெகு சிலரே. தெள்ளிய நடையிலே உண்மைகளை பிறர் மனம் புண்படா வண்ணம் எழுதக் கூடிய வன்மை அவரிடமே இருந்ததென்றால் அது மிகையன்று.

பொருளாதாரத்தில் உரிமை வேண்டும் என்று தொழி லாளர்க்கு உணர்வு ஏற்படுத்தியவரே திரு. வி. க. வெள்ளையர் மில் முதலாளிகள் செய்த கதவடைப்புகள் எத்தனை, எத்தனை அந்த வல்லரசு அதிகாரத்தை எதிர்ப்பது என்ன சாமான்யமா?

தொழிலாளர் நலனையே உத்தேசித்து போராடி, திரு. வி. க வெற்றியுங் கண்டார்; இது எதைக் காட்டுகிறது?

அவர் தனிச் சிறப்புக் கொண்ட ஒரே தொழிலாளர் தலைவர் என்பதை எடுத்துக் காட்ட இதைவிட சான்று வேண்டுமா?

போராடிய தொழிலாளர் உணர்ச்சி வசப்பட்டு, மூர்க்க நெறி வழி செல்லாமல் தடுத்து நிறுத்துவது எளிதா!

இந்த மகத்தான செயலை செய்யக்கூடிய ஒரு தொழிற் சங்கத் தலைவர் திரு. வி. க தவிர யாரே உளர்!

தன்னை நாடு கடத்தப் போகிறார்கள் என்று அறிந் தாரே, சிறிதேனும் அச்சங் கொண்டாரா? தொழிற்சங்க வேலைகளினின்று ஒதுங்கினாரா?

I 73