பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

திரு. வி. க ஒரு சீர்திருத்தவாதி

அரசியலிலே!

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து ஆறாம் ஆண்டு இறுதியிலே உலகத்திலே ஒரு பெரிய நிகழ்ச்சியுற்றது. அந்நிகழ்ச்சி எது?

பெரியதொரு சாம்ராஜ்யத்தின் தலைவராக வீற்றிருந்த ஒருவர்-மன்னர் ஒருவர்-முடி துறந்தார். சாம்ராஜ்யம் எது? மன்னர் எவர்?சாம்ராஜ்யம் என்பது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். மன்னர் எட்டாம் எட்வர்டு.

இன்றைய நிலையில் பிரிட்டன் பல் இழந்த கிழச்சிங்கம். ஆனால், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தி ஆறாம் ஆண்டிலே அது பெரியதொரு வல்லரசு.

இத்தகைய வல்லரசின் மன்னராக வீற்றிருந்தவர் எட்டாம் எட்வர்டு.

இவர் ஏன் முடி துறந்தார்? ஒரு பெண்ணின் பொருட்டு. எட்வர்டு மன்னர் தம் மனம் பற்றிய மங்கை ஒருத்தியை மணம் புரிய விரும்பினார். எதிர்ப்புத் தோன்றியது.

I 75