பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடுகளின் பொருட்டும், சாம்ராஜ்யங்களின் பொருட் டும் உலகில் போராட்டம் மிகுந்துள்ள வேளையில் எட்வர்ட் ஒரு பெரும் சாம்ராஜ்ய பதவியைத் துரும்பாக நினைத்து அதைத் துறத்தல் நேர்ந்தது...

எட்வர்ட் தியாகஞ் செய்த பதவி எத்தகையது? அஃது ஒரு ஜில்லா போர்ட் தலைமைப் பதவியா? ஒரு மாகாண மந்திரிப் பதவியா? ஒரு கவர்னர் பதவியா? ஒர் அரச ப த வி யா? அஃது இவையெல்லாவற்றினும் பெரிய சாம்ராஜ்யப் பதவியன்றோ?

சிறு சிறு அமைப்பின் தலைமைப் பதவியை இழக்க, மக்கள் எளிதில் ஒருப்படுகிறார்களா? தம்மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானங்கள் மலிந்தாலும், தம்மைப் பிடித்துத் தள்ளினாலும், சி!சி!’ என்று எள்ளினாலும் ஒரு சிறிய அமைப்பின் பதவியை விட்டகல இக்காலத்தவர் விரும்பு கிறாரா? அவர், மானத்தினும் பதவியையே பெரிதாக மதிக் கிறார்; அதற்காக அவர் எவ்வளவு பாடுபடுகிறார்! உழைக் கிறார்; இழிதுறைகளிலும் இறங்குகிறார்! அவர்தம் மனம் உடும்பினும் கடுமையாகப் பதவியைப் பற்றிக் கிடக்கிறது. அவர் மனிதரா? ஒரு பெரும் சாம்ராஜ்யப் பேற்றை உரிமை யின் பொருட்டு ஒரு நொடியில் தியாகஞ் செய்த ஒருவர் மனிதரா?

“உலகில் முதலாளி-தொழிலாளி வேற்றுமை உணர்வு, சன்மார்க்கத்தை வளர விடாது. சன்மார்க்க வளர்ச்சிக்கு முதலாளி-தொழிலாளி வேற்றுமையுணர்வு பொன்றியே தீர்தல் வேண்டும். வேற்றுமையுணர்வு எப்படிப் பொன்றும்? இதற்குப் புரட்சி தேவை. புரட்சிக்கு உரியது தொழிலாளர் இயக்கம் என்று சொல்ல வேண்டுவதில்லை. ஆதலின் யான் புரட்சி மனப்பான்மையுடன் தொழிலாளர் இயக்கத்தில் இறங்கினேன்.”*

  • திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்.

A 440–13 I 81