பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறார்கள்: நித்திய ஜெபமுஞ் செய்கிறார்கள், ஆனால் அவர்களது வாழ்வில் பைபிள் படிப்பும், சுவிசேஷ பிரசாரமும் நித்திய ஜெபமும் நுழைந்து ஒன்றுவதில்லை. கலெக்டரைப் போலவும், கவர்னரைப் போலவும், பிஷப்புக்கள் அதிகாரி களாகவே வாழ்கிறார்கள். அன்பைப் பார்க்கிலும் அதிகாரமே அவர்களிடத்தில் விஞ்சி நிற்கிறது. பிஷப்புக்கள் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறார்களேயன்றி, கிறிஸ்துவைப் போல் வாழ, அவர்கள் விரும்புகிறார்களில்லை. அவர்கள் பிரபுக்கள் உலகில் வாழவே விரும்புகிறார்கள்.

அவர்களுக்குக் கிறிஸ்துவின் உலகம் எங்ஙனம் விளங்கும்? “எட்வர்ட் திருமணத்திலும், முடி சூட்டலிலும் நாங்கள் கலந்து கொள்ளோம்” என்று கூக்குரலிட்டவர் யார்? பிஷப்புகளல்லவோ? அவர் ஏன் கூக்குரலிடல் வேண்டும்? அவர் அன்புக் கிறிஸ்து உலகில் வாழ்ந்தால் கூக்குரலிட்டி ருப்பரோ? அதிகார சாத்தான் உலகம் கூக்குரலை எழுப்பி விட்டது. சாத்தான் உலகம் சோதனைக்குரியது. அச்சோதனையைக் கடப்பவரே தெய்வப் பிள்ளைகளாவர். “...பின்னும் பிசாக அவரை மிகவும் உயர்ந்த மலைமேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும், மகிமைகளையும், அவருக்குக் காண்பித்து நீர் சாஷ்டாங்க மாக விழுந்து என்னைப் பணிந்து கொண்டால் இவைகளெல்லாவற்றையும் உமக்குத் தருவேன்’ என்று சொன்னான். அப்போது இயேசு:

‘அப்பாலே போ சாத்தானே! உன் கர்த்தராகிய கடவுளைப் பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய் என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசு அவரை விட்டுப் போனான். இதோ, தெய்வ தூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.”

இங்கே சாத்தான் உலகம் எது? கிறிஸ்துவின் உலகம் எது? என்பது நன்கு விளங்குகிறது. இவ்விரண்டில் காண்டர்

மத்தேயு 4:8:11.

I 8 &