பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலும் மட்டும் ஒருவர் கிறிஸ்துவின் அடியவராகார். தரித்திரர் நலங் கருதியும், பாவிகள் நலங் கருதியும்.மனமாரப் பாடுபடுவோரே கிறிஸ்துவின் அடியவராவர்.

‘பிஷப்புக்கள் நீண்ட அங்கிகளைத் தரித்து சுவிசேஷப் பிரசாரஞ் செய்கிறார்கள். ஜெபம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தரித்திரர்களுக்கென்றும், பாவிகளுக்கென்றும் வாழ்கிறார்களில்லை. அவர்கள் பிரபுக்களுக்கென்று வாழ் கிறார்கள். பிரபுக்களுக்கென்று வாழ்வோர் எங்ஙனம் கிறிஸ்துவுக்கு அடியவராயிருத்தல் கூடும்?’

பெண்ணின் பெருமை பேசிய திரு வி.க-காதலின் உயர்வு பற்றிப் பேசிய திரு. வி. க-'முடியா காதலா சீர்திருத்தமா?’ நூலில் என்ன சொல்கிறார் பாருங்கள்.

‘பெண்ணெனுங்கனி, வாழ்விற்கு வேண்டற்பாலதே. ஆனால் பெண் எனில் எப்பெண்? கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? இருவரை மணந்து விலகிய ஒரு பெண்ணையா அரசர் நாடுவது? என்று உலகங் கேட்கும். எவ்வுலகம் கேட்கும்? பால்டுவின் உலகம் கேட்கும்; பாதிரி உலகம் கேட்கும்.”

‘உலகமென்பது உயர்ந்தோர்மாட்டு’ எனும் பொரு ளுடைய உலகம் கேட்குமோ? காதல் இன்னது என்று உணர்ந்த கடிமண உலகங் கேட்குமோ?’’