பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாஃஞவல்கீயர் என்ற தவச்சுடருக்கு நிகர் என காத்யாயினி என்ற பெண் வேதாந்திக்கு ஒரு சூத்திரமே தந்த பெருமை படைத்த நாடு:

அந்தக் காலத்திலே, இவர்களை எல்லாம் மெல்லியலார் என்று சமூகம் ஒதுக்கவில்லை; இழிவு செய்யவில்லை.

எனவே அப்போது நாடு செழித்தது; பெருமை பெற்றது: புகழ் ஏற்றம் அடைந்தது; முன்னேற்றமும் அடைந்தது.

இத்தகைய நாட்டில் இடைக்காலத்தில் என்ன நடந்தது: சுயநலம் பெண்களின் உரிமைகளைப் பறித்தது; கல்வியை பெண்ணினத்திற்கு மறுத்தது; இந்த அடாத செயலுக்கு ஒளவையார் வாக்கைக் காட்டி நியாயம் கற்பித்தது. ஒளவையார் வாக்கு யாது?

‘பேதமை என்பது மாதர்க்கணிகலன்.’

பேதமை என்ற சொல்லுக்கு இவர்கள் கூறிய பொருள் என்ன தெரியுமா? பேதமை என்றால் அறிவு இன்மை; மடமை; இதற்கு ஆதாரமும் காட்டினர். எதிலிருந்து? தமிழ் மறை திருக்குறளிலிருந்து. பேதமை என்ற அதிகாரத்தை தம் செய்கைக்கு ஏற்றாற்போல் திரித்துப் பொருள் கூறினர்.

தமிழ் அறிஞர்கள் இதை ஏற்கவே மாட்டார்கள் என்பது பேருண்மை. ஏன்?

இந்த அதிகாரம் ஆண் வர்க்கத்திற்கும் உரித்தானதே என்பதை அவர் அறியாரோ!

நெஞ்சு பொறுக்குதில்லையே!

கல்வியை பெண்ணினத்துக்கு மறுத்த செயல் முதல்படி.

அடுத்து என்ன செய்தது இந்த சூழ்ச்சி சமூகம்?

பெண்டிர்க்கென கட்டுப்பாடுகளை விதித்தது. தானே

I 92