பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகமும் பெண்ணும்

‘உயிர்களின் தோற்றத்துக்கும் ஆக்கத்துக்கும் மூலமா யிருப்பவள் பெண். அப்பெண்ணின் வளங் குன்றுமேல் உலக வளம் குன்றும்; பெண்ணின் வளம் பெரிதும் அவளது இளமை வளர்ப்பையே ஒட்டி நிற்கும்.’

தாய் தந்தையர் பிள்ளைகளைப் பெறுவது மட்டும் பெருமையாகாது. அவற்றை நல்வழியில் வளர்ப்பதே பெருமை. பிள்ளைகளை ஒழுங்கு முறையில் வளர்க்குந் தொண்டிலும் சிறந்தது பிறிதொன்றுமில்லை.

‘பிள்ளைகளை நல்வழியில் வளர்க்க முனையாத பெற்றோர், பின்னை உலகத்துக்குக் கேடு சூழ்ந்தவராவர்; எத்தனையோ பாவங்கட்கு விதையிட்டவர் ஆவர். பிள்ளைகளை-சிறப்பாக பெண் பிள்ளைகளை-வளர்ப்ப தில் தாய் தந்தையர் பெருங்கவலை செலுத்துதல் வேண் டும். ஒரு பெண்ணின் வாழ்வு அவளோடு நிற்பதில்லை. அஃது அவள் வழித்தோன்றும் உலகையுந் தொடர்ந்து நிற்பது. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பது முதுமொழி. பெண் தாய்மைக்கு உரிய வித்து, அவளது இளமை வளர்ப்பாகலின், அவளது இளமை, நல்வழியில் அரும்புமாறு பெற்றோர் உழைத்தல் வேண்டும்; ஆகவே தாய் தந்தையர் பெண்ணின் தாய்மை விழுப்பமுணர்ந்து, பெண்ணை வளர்ப்பாராக.*

தாய் தந்தையரின் கடமைக்கு இதைவிடச் சிறப்பாக விளக்கம் தர இயலுமா?

வளர்ப்பு எவ்வாறிருக்க வேண்டும்? இதற்கும் விடை தருகிறார் தமிழ்த் தென்றல்:

  • திரு. வி. க., பெண்ணின் பெருமை”, பக். 60. * p > p 3 பக், 62.

194