பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால நாகரீக இயல்புக்கு இக்கருத்து எவ்வளவு பொருத்தம்.

கவர்ச்சியே ஒடு

‘பிறர் உள்ளத்தைக் கவரும் முறையில் உடைகோலஞ் செய்யும் பெண்மணிகள் நிலைக் குறித்து இரங்குகிறேன்.”

‘தீய எண்ணம் உலவும் மனமுடைய ஆண் மக்கள் மனத்தையும் கவரக்கூடாத அமைதி பொருந்திய உடைக் கோலமும் உண்டு. அத்தகைய தெய்வீக எண்ணமூட்டக் கூடிய உடைக்கோலங் கொள்ளவே பெண்மக்கள் இளமை தொட்டு பழகல் வேண்டும்.”*

நகைப் பித்து

“நகை. நகை!” என இக்காலத்திலும் பெண்கள் பித்து கொண்டு, அலைவதைக் காண்கிறோம். இதை அவர் கண்டித்தார். எத்தகைய காலத்திலே? நகைதான் பெண்ணின் நிலையான ஆதாரம். அதுவே அவளுடைய முழு சொத்து எனக் கருதிய காலம். இதற்கெனவே சமூகம் அவர்களை நகை காய்ச்சி மரமாக ஆக்கிய காலம். நகை இன்றேல் பெண் இல்லை எனத் திட்டவட்டமாகப் பெண் களை ஒதுக்கிய அக்காலத்தே திரு. வி. க அக்கொள்கையைக் கடுமையாக எதிர்த்தார். ஏன்?

பெண்கள் அணிந்த நகைக் குவியலில் எத்தனையோ ஏழைகள் உழைப்பு கண்டார்! வறுமை கண்டார்; ஏழையின் ரத்தக் கண்ணிரைப் பார்த்தார். நகை அழகு தருவதன்று. பகட்டை வீசுவது. பகட்டு ஒரு பெண்ணுக்குத் தேவையா? இல்லை, இல்லை! பின் அதை சுமப்பானேன்!

இதுவே திரு. வி. கவின் கருத்து. முன்சொன்ன நூல், பக். 97.

A 440–13 1 97