பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைப்பித்தால் நாசமடைந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை உடல் நலனுக்காக அணியப்பட்ட ஒரு சில நல் மணிகள் இந்த நகைப்பித்தால் பிற்காலத்தில் போலி மணி களுக்கும் நகைகளுக்கும் இடங்கொடுத்து, இன்று வெறும் சேர்க்கையாக அன்றோ பொலிந்து விட்டது!

‘பெண்ணின் முகம் எனது புத்தகம்’ என்றார் அறிஞர் பைரன். பெண்ணின் அழகு முகத்தில், அதிலும் அடக்கம், பொறுமை, அறிவு இவை பொலியும் முகமே-அதுவும் அத் தகைய பெண்ணின் முகமல்லவோ அழகோவியம்? இதற்கு நகை ஏன்? தாய்மைக்கு அஃதொரு அத்தியாவசியமான தேவையோ? திருமணத்திற்கு அஃதொரு சிறப்போ? நகை இல்லையேல் தக்க துணை கிடைக்காதோ? எதற்கு இச் செயற்கை?

நீதியோ? முறையோ?

கை பிடித்த பெண்ணைக் கைவிட்டு ஒடும் ஆண் மக்கள் ஆண்களோ? இவரை ஏசுவாரில்லை! தூற்றுவாருமில்லை. ஆனால் இவர்கள் கோழைத்தனத்திற்குப் பலியான பெண் மக்களுக்கு மட்டும் ‘வாழாவெட்டி’ என்ற பட்டம்! நீதியோ? பதியிலா பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் முறையோ?*

கணவனை இழந்த பெண்களின் அவல நிலைதான் என்ன?

தாரம் இழந்தவன் மீண்டும் புது மாப்பிள்ளை! இது முறையோ? -

கைம்மை இருவருக்கும் உள்ளதே. அங்கனமிருக்க இந்த அநீதிக்கு என்னென்பது.*

  • விரிவு பக். 295, 296- பெண்ணின் பெருமையில்

காண்க, * வாழ்க்கைத் துணை, பக். 296.

1 98