பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தகைய நடவடிக்கைகள் உள்ள ஒருவனே மனிதன். அவனே கடவுளின் ‘மறுபதிப்பு. இதை அவன் உணர்வான். கடவுளைத் தேடி எங்கும் அலைய மாட்டான். இயற்கையிலே கடவுளைக் காண்பான். அறியாமையைக் கடிவான்: நல்வழியில், சிறந்த தொண்டில், ஆன்மீக பாதையிலே வாழ்க்கையை நடத்துவான். பகவத் கீதை சொல்லியபடி வாழ்வான்; பலன் கருதாத உதவியே செய்பவனாக இருப்பான்.

பொறுப்புள்ள, நேர்மையான, ஒழுக்கமுள்ள வாழ்க்கை நடத்துபவன், மெய்யறிவைத் தேடி காட்டுக்கு ஒடுவானேன்? நல்வழியிலே வாழ்பனை நாடி ஒடிவரும் மெய்யறிவு.

இந்தக் கண்ணோட்டத்தில் காந்தியை பார்க்கிறார் திரு. வி. க. நாமும் அதையே செய்வோமா?

பிறப்பு வளர்ப்பு

அண்ணல் காந்தி நல்லதொரு வாணிப வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். நேர்மையான பெற்றோர். தாயோ பண்டை பழக்க வழக்கங்களில் ஊன்றியவர். அண்ணல் ஒரு சிலரை தொடக் கூடாதென்று கட்டு போட்டது, அவர் பழைமை.

தாயின் இக்கொள்கை காந்தியடிகளுக்குப் பிடிக்க வில்லை. நேரிடையாக எதிர்ப்பு தெரிவித்தாரா என்றால் அதுவுமில்லை. பின் மாறுபட்ட ஒரு கொள்கையை வாளா ஏற்கலாமோ? ஏற்றால், சரியாமோ?

மாறுபட்ட கொள்கையாயினும் தாயின் மனத்தை புண் படுத்த விரும்பவில்லை காந்தி, எனவே வாளாக ஏற்றார். இது சரியாகாதோ?

இதே போன்று மற்றொரு எடுத்துக் காட்டையும் கொடுக்கிறார் திரு. வி. க.

203