பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்கம் அமரருள் உய்க்கும்

அடக்கம் காந்தியடிகளின் அணிகலன். அடக்கத்துடன் பொறுமையும் இணைந்தது. சத்தியாக்கிரகம் உயிர் பெற்றது. சத்தியாக்கிரகம் என்பது யாது?

‘சத்தியத்தை ஆக்ரமித்து நிற்பதே இது. தமிழில் ‘உண்மையைக் கடைப்பிடித்தல்’ என்றே கூறுகிறோம்.இந்த சத்தியாக்கிரக மார்க்கம் புதியதல்ல. செம்பொருள் அநாதி: அதே போன்ற சத்தியாக்கிரகமும் அநாதியே. சத்தியாக் கிரக உண்மையை நிலை நிறுத்தப் போராடிய பிரஹ்லாதன் ஒரு சத்தியாக்கிரகியே!

கிரேக்கத் தத்துவ ஞானி சாக்டீலாம் பிரகலாதன் போன்று சத்தியாக்கிரகியே! டால்ஸ்டாயும் ஒரு சத்தியாக் கிரகியே.

என்றாலும் நம் காந்தியடிகளின் சத்தியாக்கிரகத்திற் கும் லியோ டால்ஸ்டாய் சத்தியாக்கிரகத்திற்கும் சிறிது வேற்றுமையுண்டு. இரண்டும் அறமுறையே. அதை விளக்கப் பயன்படுத்தப்படும் சொற்றொடர்களில் வேற்றுமை காண் கிறோம். காலத்திற்கேற்ப அவை பெறும் பெயரும், மற்றொரு வேற்றுமை.

சத்தியாக்கிரகத்தை ‘நமது நாட்டார் அருணெறி

என்றும், திருநெறி என்றும் நல்லாறு என்றும் சன்மார்க்கம் என்றும் அழைத்துப் போந்தனர்.”*

“சத்தியாக்கிரகம் பெயர் வரலாறு

முதலில் இந்த அருணெறி தென்னாப்பிரிக்காவில்

சாத்வீக எதிர்ப்பாகத் (Passive Resistance) ஆகத் தோன்றி யது. இண்டியன் ஒபீனியன்’ என்றொரு பத்திரிகை இந்த

  • பக். கங்க-சத்தியாக்கிரகம், மனித வாழ்க்கையும்

காந்தி அடிகளும்.

05