பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெனரல் டையரை வேலை நீக்கம் மட்டும் செய்தால் போதும்; அவருக்குப் பெருந்தண்டனை ஏதும் கொடுத்தால் அது பெருந்தவறு எனக் கூறினார்.

“பகைவனுக் கருள்வாய், நன்னெஞ்சே!’ என செயலில் கடைப்பிடித்த அன்னாரது இதயம் எத்துணைப் பெரியது. இது என்ன பிரமாதம்! தமக்கு நேரடி பாதிப்பு ஏற்பட வில்லை. பரந்த மனம், பொறுமை கைகொண்டது என்று கூறுவோர் பலர்,

அவர்களுக்கும் இங்கே ஓர் அரிய எடுத்துக்காட்டு.

அண்ணல் காந்தி பிரார்த்தனை கூட்டமொன்றில் சுடப் பட்டார். தடுமாறி கீழே சாய்ந்தார் அண்ணல். அப்போதும் அவரது கைகள் கும்பிட்டன; வாய் இராம், இராம்” என உச்சரித்தபடியே உயிர் நீங்கியது.

இத்தகைமை எத்தகைத்து? எளிதோ?

சட்ட மறுப்பு

1907 ஆம் ஆண்டு. தென்னாப்பிரிக்காவில் இந்தியர் கட்டாயமாக பதிவு செய்துக் கொண்டுத்தான் வாழ வேண்டும். இன்றேல் நாடு கடத்தப் படுவார்கள் என்று ஒரு சட்டம் வந்தது.

காந்தியடிகள் இச்சட்டத்தை எதிர்த்தார்.

அரசாங்கம் சும்மா இருக்குமா? அண்ணலை நீதிமன்றத் தில் குற்றவாளி என கூண்டில் நிறுத்தியது. விசாரணையும் நடந்தது. யான் குற்றவாளியே” என ஒப்புக் கொண்டார் அண்ணல்,

“ஓர் அறிக்கை செய்ய விரும்புகிறேன்’ என்று கேட்டுக் கொண்டார் அண்ணல்.

வேண்டுகோள் நிராகரிக்கப் பட்டது.

208