பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் என் செய்தார்? பொறுமைப் போர் நிகழ்த்தி னார். அரசாங்கம் அதிகார வெறிகொண்டு ஆடியது; தலை விரித்தாடியது; நிலங்களை ஏலம் போட்டது. -

கெய்ரா மக்கள் அசையவில்லை. இறுதியில் அதிகாரம் ஆன்ம பலத்திற்கு அடிபணிந்தது. உண்மையையும் அஞ்சா மையையும் அதிகாரம் ஆட்கொள்ள முடியுமா? சிறைகள்

சிறைகள் பலவிதம், ஒருவரை ஒருவர் சிறைப்படுத்தும் முறைகள் பற்பல. ஒரு காலத்தில் நம் நாட்டவர் பெண் மக்களுக்கு கல்வி மறுத்து அடக்கியது ஒருவித சிறை. தீண் டாமை மற்றொருவிதச் சிறை.

சில உரிமைகள் சிலருக்கே உரியன என்பது வேறுவித சிறை.

நிற வேற்றுமையால் ஏற்படும்,தொல்லைகளும் சிறையே.

சட்டங்களும் ஏற்படுத்துவது சிறையே.

ஒரு நாட்டுக்கு மற்றொரு நாடு சிறைப்படலும் மற்றொரு வகை.

அறியாமையோ உலகையே உட்படுத்தும் பெருஞ்சிறை.

இதற்கு மாற்று? அண்ணலின் இயக்கங்களே! ஒத்துழையாமை இயக்கம்

இதுவும் சத்தியாகிரகத்தின் ஒரு கூறே. அன்னிய பொருட்களின் சந்தையாகியது நம்நாடு வெள்ளையர் ஆட்சியில். அது மட்டுமா? அன்னிய மோகப் பேய் அனைவரையும் பிடித்து ஆட்டியது. சுதேசியத்தை ந சு க் கி யது. அழித்தது. நம் நாட்டுக் கல்வி அரியணையில் ஆங்கிலப் பெண் வீற்றாள். இந்திய மொழி அணங்குகள் கூற்றேவல் செய்தனர். நமது நீதிமுறைகள்:

2 . I