பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாகிரகிகளுக்கு சிறைக் கோட்டம் தவக் கோட்ட மாகவும் அறக் கோட்டமாகவும் மாறியது.

மறுப்பும் எதிர்ப்பும்

இந்த ஒத்துழையாமை இயக்கம் பற்றி கவியரசர்

இரவீந்தரநாத தாகூர் குறை கூறினார். அஃது எதிர் மறையையும்,மறுப்பையும், பிரிவையுங் கொண்டதென்றார்.

அண்ணல் இந்தக் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்தார். தாகூரையும் அழைத்தார். எதற்கு?

‘நரம்பு வீணையை எறிந்து இராட்டின வீணையை முழக்குமாறு அழைப்பு விடுத்தார்!

சன்மார்க்கத்தையே தன் உயிராகக் கொண்டார் மகாத்மா.

அவருடைய கடவுள் அன்பு; ஒளி, உண்மை; கொல்’ லாமை-அவர் கொண்ட விரதம் கொல்லா நோன்பு அவர்தம் மதமாகக் கூடக் கொண்டார் srerairth. இருப்பினும், அத்தருமத்தினின்று தாம் வழுவி வீழ்ந்ததாக காந்தியடிகளைக் குறை கூறியோர் சிலர். அந்தக் குற்றச் சாட்டுக்கு சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டினர்.

ஆசிரமத்தைச் சுற்றி வெறி நாய்கள் சுற்றி வந்தன; இந்த வெறி பிடித்த நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே வந்தது. இதனால் ஆசிரம வாசிகள் மிகவும் அவதியுற்றனர்.

அடிகள் இதைக் கண்டார்; வெறி நாய்களைக் கொல்லுமாறு ஆணை பிறப்பித்தார் அண்ணல், இது கொல்லாமை ஆகுமா என்பது ஒர் குற்றச்சாட்டு.

ஆசிரமத்தில் நோய்வாய்ப் பட்டது ஒரு கன்று. ஒவ்வொரு நொடியும் சித்திரவதைப் பட்டது. அதைக் கொல்வித்தார் அண்ணல். இது சரியா? கொல்லா

A 440–14 213