பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்துடன் வாழக் கற்றுக் கொள்வதே என்று வேதாந்தம் பேசிவிட்டால் கற்றின் பிணி தீர்ந்து விடுமா?

பிறர் துன்புறுவதை வாளாகப் பார்த்துக் கொண்டி ருப்பது அறமாமோ? இரக்கமாமோ? இல்லை அன்பாகுமோ? துன்பத்தைக் களைவதல்லவா சிறந்த தீர்வு: அக்கன்றின் துன்பத்தைக் களைய அமைந்த ஒரே வழி, உயிர் நீக்கல் தவிர வேறு யாது? துயர் துடைக்க மேற்கொண்ட இச் செய்கை, அன்பின்பாற் பிறந்ததே. கன்றின் வாழ்வின் முடிவிலே பிறந்தது உய்வு உய்வளிக்க உதவியது அறமே; அன்பே, இரக்கமே என்று அடித்துக் கூறுகிறார் திரு. வி. க.

இது காலத்தால் செய்த உதவியன்றோ? அறிந்தறிந்து மக்களைத் திரட்டி யுத்தம் என்ற பலி பீடத்திற்கு மனதார அனுப்பியதும் சரியோ? அதுவும், நம்மைச் சுரண்டிக் கொழுத்தவர் உதவிக்கு ஒன்றுமறியா மக்களைத் திரட்டி அனுப்புவது மெச்சத் தகுந்த செயலோ? அண்ணல் ஐரோப்பாப் போருக்கு படைத் திரட்டியது உண்மையே. அஃதும் சரியே என்றார் அண்ணல்,

எப்படி? ஏன்? எவ்வாறு என்ற கேள்விகளுக்கு விடை பகர்ந்தார்,

ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியால் சில நலன்கள் இந்தியாவுக்கு ஏற்பட்டதை மறத்தலாகாது. அவ்வாட்சிக்கு ஊறு நேர்ந்தால் பின்னே அகிம்சா பேச்சுக்கே இடமிருக் காது. எனவே அவ்வாட்சியைக் காப்பது தம் கடமை. அகிம்சா பிரசாரத்துக்கு அப்போதுதான் இடமிருக்கும் என்பதால் துணை நின்றதாக சமாதானம் கூறினார் அண்ணல்.

அன்னியத் துணிமணிகளை எரித்ததும் தவறல்ல என்று திட்டவட்டமாகக் கூறினார் அடிகள். மக்கள் அப்போதிருந்த நிலை யாது? பகை வெறி அவர்களிடம் ஆதிக்கம் செலுத்தி யது. கண்ணுக்குக் கண்: பல்லுக்குப் பல் என்ற நீதி எங்கு

21 6