பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையாரைப் பற்றி காந்தியடிகள் போற்றாத கூட்டமே கிடையாது என்று சொல்லலாம்.

கன்னி எமிலி ஹாப்ஹெளஸ் மற்றொரு ஆங்கிலப் பெண்மணி. அஞ்சாமல் ஆங்கிலேயர் செய்த தீமைகளைச் சுட்டிக் காட்டிக் கடிவதில் சிறிதும் பின்வாங்காதவர்.

இவரது துணிவையும் அஞ்சா நெஞ்சினையும் வாயாரப் போற்றினார் அண்ணல் தம் யங் இந்தியா’ பத்திரிகையில்.’ காந்தியடிகள் வாழ்க்கை-ஒர் ஆராய்ச்சி

அடிகளைப் பற்றி நுணுக்கமாக ஆராய்ச்சி செய்யும் திரு. வி. க இவரது வாய்மையைப் போற்றினார். அவரை ‘அன்பே உருவானவர் எனப் புகழ்ந்தார். அவர்தம் செயல்களை ஆராய்ந்தார்; சீர்தூக்கிப் பார்த்தார்; அதற்கு எடைக்கற்களாக அடிகளின் கொள்கைகளையும் பிரசாரங் களையும் போட்டார். தராசின் மற்றொரு தட்டில் அடிகளை நிறுத்தினார்; இந்தத் தட்டு மனிதன் என்பது. தம் ஆழ்ந்த அறிவு என்ற முள்ளின் வழி நின்று சீர் தூக்கிப் பார்த்தார். அடிகள் ப்ற்றி மிக்க உயர்வான அபிப்பிராயம் கொண்டி ருந்தாலும் அவர்தம் எல்லாச் செய்கைகளையும் அப்படியே ஏற்கவில்லை தமிழ் முனிவர். சிலவற்றில் மாறுபட்டார்.

‘'காந்தியடிகள் வாழ்க்கை வருணாச்சிரம தர்மத்தை எவ்வழியில் கொண்டிருக்கிறது என்பதை சிறிது நோக்கு வோம். மகாத்மா காந்தி தம்மை சநாதன இந்து என்று பலவிடங்களில் சொல்லியுமிருக்கிறார்: எழுதியுமிருக்கிறார். அவர் தொழிலுக்கேற்றவாறு சாதிகள் அமைக்கப்பட்ட ஒழுங்கு முறையை வியந்து, வியந்து பாராட்டுகிறார்.”

‘சாதியின் பரந்த அமைப்பு இந்து சமய ஞானத்துக்குத் துணை செய்வதாகிறது.’

  • மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும்’, பக். உ. ச. அ. 3 5 பக். ககக.

2 ] 8