பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி ஹிந்து மதத்தின் சக்தியும் இரகசியமும் ஆகும்.’ ‘நால்வகை சாதிகள் சாலும்.’

வருணாச்சிரமத்தைப் பற்றி அடிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களில் பல பொன்னே போல போற்றற்குரியன. ஆனால் ஒன்று மட்டும் என் சிற்றறிவிற்கு விளங்கவில்லை. அஃதென்னை? அது பிறப்பு வழி வருணாச்சிரமம் இயங்க வேண்டுமென்பது. இது குறித்து பன்னெடு நாள் நான் உன்னியதுண்டு. இன்னும் அதன் துட்பம் எனக்குப் புலனாக வில்லை.’

‘பிறப்பையொட்டித் தொழின் முறைகளைக் கட்டுப் படுத்தல் இயற்கை நோக்கைச் சிறைப்படுத்துவதாகும். அவரவர் இயல்புக்கேற்ற தொழில்களை அவரவர் ஏற்றுச் செய்யலாம். அவரவர் இயல்பு வழித் தொழில்களை ஏற்றுச் செய்வதே இயற்கை முறை. பிறப்பு வழித் தொழில்கள் நடைபெறல் வேண்டுமென்று கட்டுப்படுத்துவது இயற்கையை ஒறுப்பதாக முடியும் ,'’

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

என வரூஉந் திருவள்ளுவர் மொழியே இயற்கை நோக்குக்கு அரண் செய்வதாகும். இதுவே சிறியேன் உட்கிடக்கையும்.”*

திரு. வி. கவின் கண்ணோட்டத்தில்

திரு. வி. க அடிகளை திருவள்ளுவர் கூறிய அந்தண ராகக் கண்டார். விலங்குணர்வு நீக்கப்பெற்ற தன்னடக்க உருவாகக் கண்டார்; சமாச விளக்காசக் கண்டார்; நாட்டில் தியாகராசனாகக் கண்டார்; அனைவருக்கும் பொது

  • காந்தியடிகள்- பக். ககஉ - மனித வாழ்க்கையும்

காந்தி அடிகளும். * மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பக். க.க.அ

பிறப்பு.

219