பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்காசியின் திருவள்ளுவர் கழகத்தினர் கொடுத்த ஊக்கமும், இந்த அரிய நூலை முதலில் கவசக்தி’ யிலும், பின்னர் நூல் வடிவமாக உருப்பெறவும் செய்தன.

அடுத்த பகுதி, இல்லற இயல் தனியே வெளிவந்தது.

பாயிரப் பகுதி 4 அதிகாரங்களும், இல்லற இயல் முதல் 6 அதிகாரங்களைக் கொண்டது. பாயிரப் பகுதியில் 40 குறட்பாக்கள் இடம் பெறுகின்றன.

முக்கிய குறிக்கோள்

தம் விரிவுரை மூலம் திருவள்ளுவரைப் பட்ம் பிடித்துக் காட்டத் தீர்மானித்தார் திரு. வி. க எப்படி? பொருள் கூறும் போது, வள்ளுவரைப் படமாகக் காட்டுகிறார் தமிழ்த் தென்றல், அதுவே படம் காண ஒளியைக் கொடுக்கும் விளக்காகிறது. கருத்து மூலம் பொய்யாமொழிப் புலவரின் துண்மை புலனாகிறது. வையத்திலே, வையகத்திற்காக வையத்திற்கெனவே வாழ்ந்த தமிழ் மறைதனைத் தந்த வள்ளுவரின் உள்ளத்தை, அடுத்தது காட்டும் பளிங்கும்’ போலக் காட்டுகிறது.

உலகம் யாது? பிறப்பும் இறப்பும் மட்டுமே கொண்டதல்ல உலகம். அது எண்ணங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கூடக் காட்டுவது.

விருத்தி, பொருளையும், கருத்தையும் இணைப்பது: அவர் தம் உயர் எண்ணங்களையும் சீரிய நோக்கங்களையும் குறளைப் படித்தவர்க்கு உணர்த்தும். உற்ற நோய் தீர்க்கும் அருமருந்தை அறியச் செய்யும்; போற்றச் செய்யும்.

விரிவுரை உருவானபோது!

விரிவுரை காணத் துணிந்தபோது திரு. வி. கவின் சூழ் நிலைதான் என்ன! தொல்லை, தொல்லை எங்கும் தொல்லை! தொழிலாளர்க்குத் தொல்லைகள்! கர்நாட்டிக்