பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுமை உளறல்

இன்றைய உலகின் நிலை என்ன? மூத்த வயதினர் இளைய வயதினரிடையே கருத்து ஒற்றுமை நிலவுகிறதா? இல்லையே! இவ்விருவரிடையே ஏற்பட்டுள்ள பிளவு எத்தகை யது? பயங்கரமானது. பயங்கரமானது, மிகப் பயங்கர மானது!!! குழந்தைப் பருவத்தினின்று மாறி இளைஞன் பரு வம் ஏற்குமுன் நம் பிள்ளைகளுக்கு எதிர்நோக்கும் சிக்கல்கள் தான் எத்தனை, எத்தனை! இந்த பிரச்சிளைகள் முன்பு இல்லையா? இல்லை, இவைகள் திடீரென முளைத்தனவா?

குமர பருவம் (Adolescent) என்றும், தலைமுறை இடைவெளி (Generation Gap) தொல்லைகள் என்றும் பேசாதவர் இல்லை. இதனால் விளையும் பற்பல திகைப் பூட்டும் சம்பவங்கள் வராத செய்தி இதழ்களும் உண்டோ? பிற்போக்கு சக்திகள் எவை? முற்போக்கு சக்திகள் எவை? எதை விடுப்பது, எவை ஏற்பது? எப்படி வாழ்வது என்ற பிரச்சினைகள் ஒவ்வொரு நொடியும் எல்லா இடங்களிலும் விச்வரூபம் எடுக்கின்றன: அல்லல் படுத்துகின்றன. பழமைக்கும் புதுமைக்கும் போர், போர், இடைவிடா GLrrrrr !

இந்தியாவில் தற்கால இளம் வயதினர் அனுபவத்தை ‘பத்தாம் பசலித் தனமாக'க் கருதுவது சரியா? இது ஆராய்ச்சிக்குரியதொன்று.

இளம் வயதினருக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகளுக்கு தமிழ்த்தென்றல் கொடுக்கும் மருந்து யாது?

முதலில் ஆன்றோர் வழி நின்று ஒழுகு. அவ்வாறு ஒழுகினால் என்னாகும்? தெளிவு பிறக்கும்.

தெளிவு பிறந்தால் கலக்கம் ஒழியும். கலக்கம் ஒழிந்தால் ஒளி உண்டாகும். ஒளி, அறிவு ஒளியாக வீசும்.

327