பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரீகம் என்ற பெயரில் நடப்பது என்ன? நாகரீகம் என்ற போர்வையில் தேவையற்ற, நம் தகுதிக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கை மேற்கொண்டோம். ஆடம்பரங்கள்அத்தியாவசியத் தேவைகளாயின. இவை வெகு வேகமாக மிக மிக அதிகமாகப் பெருகின. இன்று? அவைகளைத் தள்ளவும் முடியவில்லை; ஏற்று சமாளிக்கவும் முடியாமல் திண்டாடுகிறோம். அந்தோ பரிதாபம்? எத்தகைய தவிப்பான நிலை!

ஒரே நிலையில் ஆடம்பரமாக வாழ்ந்தே தீர வேண்டும். இல்லையெனில்? நம் கெளரவம் பறந்தே போய்விடும். நம் போலிக் கெளரவம் பறிபோனால் வாழ முடியுமா? முடியாது, முடியாது!!!

இது கெளரவ பிரச்சினையாக தலைதுாக்கும் போது என்ன ஆகும்? ஜேப்படி, கொலை, களவு-இன்னும் பல குற்றச் செயல்களில் மனம் பாயும். எதற்காக? தேவைக்கு வேண்டிய பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிக்க.

இத்தகைய ஒரு தெளிவற்ற நிலை மாறுமா? மாற்றவும் முடியுமா?

மாற்ற முடியும், மாற்ற முடியும், மாற்ற நிச்சயம் முடியும்! என்று உறுதியாகக் கூறுகிறார் திரு. வி. க.

- இந்த உறுதியை எங்கு காண்கிறோம்?

திரு. வி. கவின் ‘சித்தம் திருந்தல் அல்லது செத்து பிறத்தல் செய்யுளில்...

“எப்படி முடியும்?’ என்று கூறுகிறார், பார்க்கலாமா?

‘தொண்டால் மூர்க்கம் அண்டா தொழியும்:

மூர்க்கப் புரட்சியால் பார்க்கு காசம்; அகிம்சை புரட்சியால் அகிலம் உய்யும்: கொலை, புலைக் குறையைக் கலையால் விளக்கும்

A 440–15 239