பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் குருகுலம் பரிவால் அமைக்க: கொள்ளை காமம் கள் பொய் கொலையென உள்ளம் தெரியப் பள்ளி காண்க: கொல்லும் கருவி செய்ய அல்லல் களத்தைச் சில விளைவு செய் ஆலயம் ஆக்குக: அருளற நெறியின் பொருளைப் பரப்புக; அந்த கெறியால் ஐந்து பாவமும் அருகி அருகி அருகிப் பொன்றும் அருளற நெறியில் பொருகிலர் இலரே”

இந்த காலத்திற்கும், எக்காலத்திற்கும் மக்கள் அமைதி யாக வாழ இதைவிடச் சிறந்த அறிவுரை உண்டோ?

இருமையும் ஒருமையும்

இந்நூல் இவ்வாறு தலைப்பு பெற்றதேன்? இருமை யாது? ஒருமை யாது?

இருமையாவது இயற்கை-ஆக்கமும் அழிவும்என்ற இரு கூறுகள் கொண்டது. ஆசை-பேராசை, அதனை அறுத்தல்; உண்மை அதற்கு மாறான பொய்மை: அறிவு அதற்கு எதிரிடையான அறியாமை, போன்ற இரட்டைகள். இவை ஒன்றிற்கொன்று திரிபாகத் தோன்றுவதால் மாறுபட்டன அல்ல. இந்த இருமைக்குப் பின்னே ஒன்று உண்டு. அதுவே ஒருமை.

ஒருமையாவது-ஒன்றாகவுள்ள ஒரு சக்தி; அதுவே கடவுள். பன்மையிலும் ஒருமையாக நீக்கமற நிற்பதே கடவுள். இந்த இருமையை ஆராய்ந்து, நமக்கு ஏற்றதை ஏற்று, தகாதனவையை நீக்க உதவுவது அந்த ஒருமை சக்தியே.

அது எப்போது வரும்? ஒருமைப்பேறு ஒருவனுக்கு.

  • சித்தம் திருந்தல் அல்லது செத்து பிறத்தல், பக். 18.

2 30