பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மக்களின் அன்பில் மலரும் அருளாட்சி (எனவே,)

தக்கது தக்கது தான்.”*

முருகன் அருள் வேட்டல்

முருகன் பதிகளில் பல இந்த நூலில் பாடப் பெறு கின்றன; பல கோளங்களில் காட்சி அளிக்கும் முருகனை, இத்துதிப் பாடல்கள் மூலம் திரு.வி.க அர்ச்சனை செய் கிறார். பாட்டர்ச்சனை ஒரு சிறந்த வழிபாடு என்பதை விளக்குகின்றன இப்பாடல்கள்.

இந்த இசை அர்ச்சனை செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றியது தமிழ்க் கடலுக்கு?

இந்தக் கேள்விக்கு கழகுமலை பாட்டுகளில் ஒன்று விடை பகரும்.

‘உலகம் பொல்லா தென்கின்றார். உளமே

பொல்லா தென்றுணர்ந்தேன்; கலக உளத்தைக் கடந்து நின்றால் கருணை வடிவே உலகெலாம், இலகும் உயிர்கள் நின் வடிவே எங்கே குற்றம் இறையோனே, அலகில் அழகே அன்பருளே அறிவே கழகு மலையானே.”

வேண்டுவது யாது?

பதவியா? புகழா? அரசா? விண்ணுலகா? அரசும் விண்ணுலகும் வேண்டேன்.’

பின் என்னதான் வேண்டும்?

‘'வேண்டும் இரங்கும் நெஞ்ச மென்றும் விளங்கும்

மற்ற அறமெல்லாம் ஈண்டி யடியார் பணி செய்யும் ஈசா! கழகு மலையானே’**

  • இருளில் ஒளி, எண்ணம்’, 34, பக். 20 * முருகன் அருள் வேட்டல், பக். 18. * * 34 பக். 20.

236