பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

இறுவாய் திரு. வி. க ஓர் அந்தணர்

திரு.வி.கவின் நூல்களைப் படித்துப் பார்த்தபின் திரு.வி.க நம் எதிரில் எவ்வாறு தோற்றமளிக்கிறார்?

பெரியவராக; மிக மிகப் பெரியவராகத் தோற்றமளிக் கிறார். இதை புராணக் கதைகளில் விசுவரூபம் என்பர் அங்கே தெய்வத்தை அவ்வாறு வர்ணிப்பார்கள். இங்கே மனிதனாகவே வாழ்ந்து, மனிதருடன் போராடி, உண்மை, நேர்மை, எளிமை என்ற குறிக்கோளுக்காக ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து, தெய்வத் தன்மை எய்திய திரு.வி,கவைக் காண்கிறோம், வணங்குகிறோம்.

நூல்கள் எழுதியவர் எத்தனையோ பேர்.ஆனால் அதன் படி வாழ்ந்தவரோ வெகு சிலரே. அந்த சிலரில் மிக மிகச் சிலரில் கடைசி வரை அதன்படியே வாழ்ந்து, வழிகாட்டி யாய் இருந்து, அமரத்துவம் அடைந்தவரோ, அவர்களிலும் மிகச் சிலரே. இந்தச் சிலருக்கு மட்டும் இந்த உறுதி எவ்வாறு ஏற்பட்டது. அவர் தம் உயர்ந்த உள்ளங் காரண மாக அமைந்ததே இவ்வுறுதி.

திரு. வி. கவின் வாழ்க்கை, அவர்தம் உயர்ந்த உள்ளத்தின் பிரதிபலிப்பு. இந்த பிரதிபலிப்பைக் காட்டுவன அவர் தம் உயர் நூல்கள்.

24.2 .