பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

கிற்க அதற்குத் தக’ என்றார் பொய்யாமொழியார், அம்மொழியினை வாழ்வில் கடைப்பிடித்த சான்றோர் தமிழ்த் தென்றல்.

அவர்தம் உள்ளம் பரந்த தன்மையுடையது. சிறியோர்,

பெரியோர், எளியோர், பெருமையுடையோர், பொருள் உடைச் செல்வர், சல்லியில்லா ஏழை என பாகுபாட்டை வெறுத்தது அவர் உயர் உள்ளம்.

‘அனைவரும் ஒன்றே"-பிறப்பில் உயர்வு தாழ்வு என்பது கிடையாது என்பதை அவர் உறுதியாக நம்பினார் . அதைத் தம் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார்.

வறுமையை வலிந்து ஏற்றார். ஆனால் என்றாவது அவர் தம்உள்ளம் அதற்காக வருந்தியதா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. வயோதிக காலத்தில், வறுமை கண்ணிழந்த அவரை வாட்டியது. வருத்தியது; அவர்தம் உறுதியை சோதிப்பது போல் தேடி ஒடி அவரிடம் வந்தது பணம்! ஆனால் நடந்ததென்ன?

உறுதி வென்றது. உயர்ந்த உள்ளம் இன்னும் உறுதி பூண்டது.

அன்பு, எளிமை, உயர் சிந்தனை இவை மூன்றும் குடிகொண்ட ஒன்றே உயர்ந்த உள்ளம். இந்த உள்ளம் தனக்கென ஓர் உருவம் கொண்டது. அந்த உருவமே தமிழ்த்தென்றல் என்றால் மிகையன்று.

இராயப்பேட்டை முனிவர் ஒர் அந்தணர். வள்ளுவம் கூறும் அந்தணர், ஏன்? வாழ்க்கையில் ‘அறவோர்; மறறெவ் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் உயர் அந்தணர்; ஒப்புவமையில்லா உயர் அந்தணர்.

“ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற மொழியினை ஒயாது முழங்கிய அவர், எம்மதமும் சம்மதம் என ஏற்கும்

343