பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Code No. A 440


திருவாளர் சக்திதாசன் சுப்பிரமணியன் ஒரு பழம் பெரும் தேசிய எழுத்தாளர். 1933 முதல் பத்திரிகை ஆசிரியராகத் தொண்டு புரிந்தவர். “சுதந்திரச் சங்கு” பத்திரிகையில் அவர் தொடங்கிய எழுத்துப் பணி, இடை விடாது அவர் அமரராகும் வரை தொடர்ந்தது. பத்திரிகைத் தொண்டு தவிர அவர்தம் இலக்கியத் தொண்டும் பாராட்டற்குரியது.

நாற்பத்தி நான்கு நூல்களை எழுதிய பெருமை அவருக்குண்டு. திரு. வி. க வின் சீடரான இவர், தம் ஆசிரியர் பற்றி எழுதிய நூல்களிரண்டு. ஒன்று திரு.வி.க. வாழ்வும் தொண்டும்”, மற்றொன்று திரு.வி.க உள்ளமும் உயர் நூல்களும். இதில் இரண்டாவது நூல் அவர்தம் துணைவியார் திருமதி ஜலஜா சக்திதாசனுடன் சேர்ந்து எழுதியது. இது ஒரு திறனாய்வு நூல். அமரர் சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதிய நாற்பத்தி நான்கு நூல்களில் இருபது நூல்களுக்கு மேல், அவர், தம் துணைவியாருடன் சேர்ந்து எழுதியவையே.

இவை தவிர, திருமதி ஜலஜா சக்திதாசன் எழுதிய ஆய்வு நூல்கள் ஆறு. சமீபத்தில் வெளியான திப்பு சுல்தான் ஒரு மதவெறியரா?’ என்ற நூல் பலருடைய பாராட்டும் பெற்றது.