பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாவற்றிற்கும் தோற்றுவாய். இதில் அகரம் தோற்று வாய். மற்றிரு ஒலிகளாய உ.ம்-இரண்டும் நிலைக்கும் ஒடுக்கத்துக்கும் அறிகுறிகள்.

இவ்வொலி தோன்றும் இடமும் ஒன்றே. ஒடுங்கும் இடமும் அதுவே. அகரம் ஒளிக்கும் பிறப்பிடம்; ஏன்? தோற்றம், ஒடுக்கம் இரண்டும் ஒரே இடத்தில் இருப்பதால். ஆகையால் அது முதலும் முடிவும் இல்லா ஒரு தொடர்: எனவே அத்தன்மையது இறையடி என்பதைக் காட்டுவ தால் ஒளியாகிறது.

இறைவன் இருள் போக்கும் ஒளி; எங்கும் இருள் இல்லாதவன்-ஒளி அல்லது சோதியானவன். அகரம் ஒளிக்கும் உலகிற்கும் இடையே உள்ளது. ஒளி கடந்த நிலையும் இறைக்கு உண்டு.

இறையொளியாக நின்று எல்லா தோற்றங்களுக்கும் பிறப்பிடம்-ஆதி அகரம். உலகே ஆதி பகவன்.

உலகு வெறும் நிலப்பரப்பா? அல்லது நீர்ப்பரப்பா? இல்லை-இல்லை! அதிலுள்ள உயிருள்ள, உயிரற்ற எல்லா வற்றையும் குறிக்கும்.

இயற்கை ஆண்டவனின் உடல்; இயற்கையோடு இயைந்த வாழ்வே நல்வாழ்வு: செவ்விய வாழ்வு; அத்தகைய வாழ்க்கையை மேற்கொண்டு, ஆண்டவன் பால் அன்பு செலுத்த செலுத்த சட்டுகள் அறும். இந்தக் கட்டுகள் அறுந்த மனிதனையே இறை என்ற சொல் குறிக்கும். ஆறறிவு படைத்த மனிதன் வாழும் உலகு எத்தகையது?

  • திருமூலர்:

‘ஒங்காரத்துள்ளே உதிக்க ஐம்பூதங்கன்

ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீதத் துயிர் மூன்றும் உற்றன ஓங்காரஞ் சிவ பரமசிவமே.”

17