பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘உலகம் பலவிதம், ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொர் உலகம்’ என்ற நிலை கொண்டவன். பற்பல எண்ணங்கள்: பற்பல சுழல்கள்; பற்பலத் தொல்லைகள் என்ற பலவும் கொண்டவனே மனிதன். இவனைக் குறித்து பேராவலுடன் காத்திருப்பான் இறைவன் ஏன்? எதற்காக? தன் அங்கத்தின் அங்கமான மனிதன்; தன் மாற்றுருவானவன் பன்மையில் ஒருமை காண மாட்டானா? எவ்வுயிரையும் தன்னுயிராகப் பேணக்கூடிய பேராற்றல் பெற மாட்டானா என்று ஏக்கத் துடன் காத்திருக்கிறான் படைத்தவன்.

உ ல க ம் ஆராய்ச்சிக்குட்பட்டது. இறைவனோ ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவன். உலகையே படைத்து, அதிலே தானும் இயங்கி, அதனையே இயக்குபவனும் அவனே. இயற்கை மூலம் அவனை உணர்ந்து, போற்றி, வழிபட்டு: இயற்கை நெறி வாழ்தலே, அவனை அறியும் வழி: காட்டுக்கு தனித்தோடி துறவறம் கொண்டு அல்ல.

ஆதி பகவன்-பல பெயர் கொண்ட ஒருவன்; தனித்தே நின்று, கலந்தும் இருந்து, கலப்பையும் கடந்து தானும் இயங்கி, அனைத்தையும் இயக்குவான் இவன். இவன் தோற்றுவாயும் முடிவுமில்லாத அனாதி.

பாவ மன்னிப்பு

கண்ணிர் விட்டுக் கதறி முறையிட்டால் ஓடி வந்து

பாவ மன்னிப்பு அளிப்பவனும் ஆதி பகவனே.

இந்தச் செயலுக்குரியவனும், செயலுமாக இருக்கும்

ஆண்டவனை, ஞான குரு மூலம் காணலாம். ஆதிபகவன்

என்ற பெயரில் ஆதிக்கு ஞாயிறு என்ற பெயரில், ஆதிக்கு ஞாயிறு என்று பொருளும் உண்டு.

பகவன் என்று கடவுளுக்கும் பிறவுயிர்க்கும் வழங்கப் படுதலால் அவன் ஆதி பகவன். ஆதி பகவன் ஞாயிறுக்கெல்

  • சுந்தரர் கண் போக்கி, அவர் முறையிட்டு கதறிய

பின் ஒளி தந்த நிகழ்ச்சி இதற்கு ஒர் உதாரணம்.

I 8