பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யப்பட்டால் ஒழுக்கம் பெருகும்; ஒழுக்கம் பெருகினால் தானம், தவம், பூசை எல்லாமே தவறாது நடக்கும்.

ஒருவேளை, அதிகமாக மழை பெய்து விட்டாலோ? வெள்ளம் வரும்; எங்கும் அழிவு, அழிவு, அழிவு!

இதனால் என்ன தெரிகிறது? இயற்கையே கடவுள். பசுமையான இயற்கை ஏற்பட இயற்கையின் மற்றொரு கூறாகிய மழை வேண்டும். மழை இருந்தால் தான் பசுமை. ஆக மழை கருணையின் வடிவம்: இறைவனின் கருணை உள்ளமே மழை. இயற்கை வளமும், மழையும் இறைவனின் இரு கூறுகள்; ஒன்றுக்கொன்று இணைந்த கூறுகளே.

இயற்கை வளத்தை இறைவன் மழை மூலம் பெருக்கு கிறான்.

‘தானே மழை பொழிதையலுமாய் நிற்பன’’

என்று திருமூலர் இதனையே திருமந்திரத்தில் கூறு கிறார்.

உயிர்களின் நாடி உணவு. உணவு விளைச்சலைப் பொறுத்தது. விளைவுக்கு, மேகம் பிறக்கும் கடலாக்கம் மிக மிக முக்கியம். இவையனைத்தும் பெற்றும், உலகில் ஒழுக்க மில்லையேல் என்னாகும்? அழிவு வரும். எனவே உலகின் முதுகெலும்பு ஒழுக்கம், ஒழுக்கமே மற்றைய நற்பயன்களை விளைவிக்கும்.

இவை எல்லாவற்றிற்கும் மூல காரணம் மழை, மழை, மழையே! மழை மூலம் வாழவைக்கும் இறைவன் கருணை என்னென்று புகழ்வது! இவ்வரிய கருத்தை பொய்யா மொழிப் புலவர் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?

முதல் மூன்று பாட்டில் இடம் பெறுவது உணவு; நான்கு ஐந்து பாக்கள் விளைவைப் பற்றியும் ஆறில் அதற்குத் தேவையான கடலாக்கம் பற்றியும் கூறும். ஏழில் ஒழுக்கம் இடம் பெறுகின்றன. தான தவ பூசை பற்றி எட்டு, ஒன்பது

A 440-2 2