பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேடிக்கை வானமா மழை பொழிகிறது? இல்லை, இல்லை! பின் அப்படி சொல்லலாமா? பேச்சு வழக்கில் என்ன சொல்கிறோம்; “வானம் பொய்த்தது” என்று கூறுகிறோம். இது தற்கால விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒப்பாததாக இருக்க லாம். இதை நாமும் அறிந்திருக்கிறோம். பின்? ஏன் இந்த பழங்கால வழக்கு?

வானம் என்னும் போது அது மனத்திற்கு எட்டாத ஒன்று. எட்டாத ஒன்றின் மீது எப்போதுமே எல்லோருக்குமே பற்று அதிகம். குழந்தைகளுக்கு என்ன சொல்கிறோம்? வானத்தில் ஆண்டவன் இருக்கிறான் என்கிறோம். ஏன், நாம் அனை வரும் அதையே ஏற்கிறோம்; நம்புகிறோம். இந்த மரபை ஒட்டியே ஆசிரியர் மழையின் மாண்பை உணர்த்தவே ‘விசும்பின் துளி என்றார்.

மழையின் வகைகள்தான் எத்தனை: துளி, துரறல், ஆசாரம், சோனை, ஆலங்கட்டி ஆகிய வகைகளில் துளியை மட்டும் சிறப்பாகச் சொல்லக் காரணம் யாது?

பசியால் வாடுகிறான் ஒருவன்; அவன் எதற்கு ஏங்குவான்? ஒரு கவளமேனும் உணவு கிடைக்காதா என்று ஏங்குவான். சிறு கூறு ஒன்றே மிக்க பெருமையுடைய பெரியதை அறிய வழிகோலும்.

மழைத்துளி போதுமா?

அதே போல் வானம் பொய்த்து ‘தண்ணிர், தண்ணிர்’ என்று பறக்கும் உயிர்கள் எதை நோக்கி ஏங்கும்? வானத்தை! எதற்காக? மழைக்காக அடை மழைக்காகவா? ஆலங்கட்டி மழைக்காகவா? இல்லை, இல்லை! ஒரு துளி மழைக்காக ஏங்கும். ஏனெனில் பெரிதாக மழை பெய்தால் காய்ந்த நிலம் தாங்காது. ஆலம் பெய்தாலோ உயிர்கட்கு அவதி; தொல்லை; சேதம்! எனவே ஒரு துளி மழை பூமியை நனைக்கும்; குளிர்விக்கும். துளி மிக அதிகமானால் புயலுக்கு ஏதுவுண்டு. மழைத்துளி புல் போன்ற தாவரங் களுக்கு உணவாகும்; வளர்க்கும். பெருமழையோ அஃதல்ல.

3