பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தவித்தவன் செயல்:

“செயற்கரிய செயல் செய்வோர் பெரியவர்; மற்றவர் சிறியவர்.

இந்த அதிகாரத்திலுள்ள கடைசிக் குறளைப் பார்ப் போம்.

அந்தண ரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டு ஒழுகலான்’

யாரைப் பற்றி இங்கு வள்ளுவர் விளக்குகிறார்? அந்தணரைப் பற்றி, பிறப்பு வழி அந்தணரா? இல்லை, இல்லை, செய்கையால் மேம்பட்ட பெருமக்களினத்தைப் பற்றி.

வள்ளுவர் கூறும் அந்தணர் யார்? முதன் முதல் அவர்கள் ஐந்தவித்தவர்; குணக்குன்றாய் வாழ்பவர்; மொழியால் செயலால் சிறப்புப் பெற்றவர் அமைதியும் அடக்கமுமே உருவானவர்; மற்றவர் செய்ய இயலாத அரிய செயல்களைப் புரிபவர்.

அரிய செயல்

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர் அதாவது எவ்வுயிரும் தன்னுயிர் எனக் கருதி, பேணி,அன்பு செலுத்துவர் இவர். இவர்களே தம் அன்புச் செய்கையால் அந்தணராவர். அந்தணர் குலத்தில் பிறந்தவர் எல்லாரும் அந்தணர் ஆகார்.

தமது நலமற்று பிற உயிர்கள் இடத்து அருள் தாங்கி நிற்பவரே அந்தணர்; அறவோர்.

முந்திய குறட்பாவின் விளக்கமே இக்குறட்பா. எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுதல் எவரால் இயலும்? தன்நலம் அற்றவராலேயே தாம் அல்லாத பிற உயிர்கட்குச் செந்தண்மை பூண்டு ஒழுதல் கூடும். இதனை

29