பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்குறளில் மற்று என்னும் சொல் கூறுவதாகும். எவ்வுயிர்க்கும் என்பது, தாம் அல்லாத பிற உயிர்களைக் குறிப்பதாகும். இதனால் பிற உயிர்கட்கு கேடு செய்து தாம் உடலோம்பக் கூடாது என்பது தெளிவாக்கப் படுகிறது. “ ‘புலனடக்கிய பெரியோர் பிற உயிர் பொருட்டே

வாழ்வர்’ ‘மணிமேகலை’யில் இந்த செந்தண்மை பற்றிக் கூறும் சில வரிகளைக் காண்போமா?

‘தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயிரோம்பு மன்னுயிர் முதல்வர்.’ செம்மை-தன்மை = செந்தன்மை என்று மருவியது.

சீவகாருண்யமே செந்தண்மை. செந்தண்மை ஒரு சிறந்த செந்தமிழ்ச் சொல்,

‘அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி’’ என்று சீவகாருண்யம் பற்றி சிறப்பித்துக் கூறினார்திருநாவுக்கரசர். சீவகாருண்யம்-மனமாசற்ற இடத்திலே தான் மலரும், சீவகாருண்யமும் புலனடக்கமும்

சீவகாருண்யம் மலர வேண்டுமானால் ஐம்புலனடக்கம் மிக மிகத் தேவை. உள்ளத்திலே மட்டும் கருணை யிருந்தால் போதுமா? போதாது; இது மற்றவுயிர்களுக்கு எந்த நன்மையும் தராது. எனவே மற்ற உயிர்களிடம் பலன் கருதாது, பேணி, அன்பு செய்தல் வேண்டும்.

செந்தண்மை பூண்டொழுகலில் எவ்வித கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. விருப்பு வெறுப்பின்றி, வேற்றுமையின்றி, பாகுபாடு இன்றி, பாரபட்சம் இன்றி, எல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுக வேண்டும்.

ஒரு சிலருக்கு மட்டும்; ஒரு கூட்டத்திற்கு மட்டும் என வேற்றுமை பாராட்டினால், அதுசீவகாருண்யமாகாது.சாதி, மதம், மொழி, பெரிய உயிர், சின்ன உயிர் எனப் பிரித்துப் பிரத்யேகமாக அன்பு செலுத்தல் சீவகாருண்யமே அல்ல!

8 0