பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் எத்தன்மையுடையது?

அறன் தீக்குணங்களை அறுப்பது; மனமாசையும் அகற்றும் தன்மையுடையது. சுருங்கக் கூறின், எல்லா நற் குணங்களும் சேர்ந்த ஒன்றே அறன்.

அறன் ஒரு மரம்

அறத்தை பெரியதொரு மரத்திற்கு ஒப்பிடலாம். இந்த பெரிய மரத்தின் வேர் இல்வாழ்க்கை: பட்டை, பிள்ளைப் பேறு; மன்றம்-அன்பு: கவடு-விருந்தோம்பல்; கோடுஒழுக்கம்; விளார்-பொறை, தளிர்-ஒப்புரவு இலை-ஈகை; அரும்பு-அருள்; மலர்-தவம்; காய் கனி-மெய்யுணர்வு, அரசு கல்வி, தொழில் முதலியன.

முப்பாலின் அடிப்படை

அறமே, அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலின் அடிப்படை. இம்மூன்றினும் சிறந்ததும் அஃதே.

பொருள் இருந்தால் அறமும் இன்பமும் அங்கு ஏற் படும். பொருளில்லையெனில் அற நிகழ்ச்சிகள் இரா. இன்ப நுகர்ச்சியும் நேரிய முறையில் உறுதல் அரிது. இது உலகறிந்த ஒர் உண்மை,

ஆனால் இப்பொருளுங்கூட நேர்மையான அறவழியில் ஈட்டப்பட்டதாக இருந்தால் தான் சிறப்பு. இன்றேல் இல்லை என்பதை பொருள் என்ற சொல்லே குறிக்கும்.

பொருள் எது, இன்பம் எது நாமறிவோம். அறத்தின் அடிப்படையில் ஈட்டிய பொருள் இன்பம் தரும்; அந்த இன்பம் நிலைக்கும்; நீடிக்கும். அறமற்ற பொருள் பொருளா காது; அதே போன்று தான் இன்பமும்.

முறை மாற்றம் ஏன்?

இன்றியமையாததன் அறிகுறியாக வான் சிறப்பும்’ இன்பத்துக்கு அறிகுறியாக நீத்தார் பெருமை"யும் பாயிரத்

32