பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளங்கும். இயல் விளங்கியதும், அதை வாழ்க்கையில் எவ் வாறு கடைப்பிடிப்பது என்ற சிந்தனை எழும். இதன்பின், அதைக் கடைப்பிடிக்கும் வழி புலப்பட்டபின் கடைப்பிடித் தொழுக முயற்சி எழும், இச்செயலால் பொருளின் பயன் அல்லது பேறு விளையும். இந்த அடிப்படையில் தான் இந்த பொருள் பாகுபடுத்தப் பட்டது.

வள்ளுவப் பெருமான் அறத்தின் விழுப்பம் பற்றி யாது கூறுகிறார் என்று பார்ப்போமா?

உயிருக்கு ஆக்கம் விளைவிப்பது எது? அறம் என்று விடை பகர்கிறார் பொய்யா மொழியார்.

அத்துடனா? இவ்வறத்தினுஞ் சிறந்ததொன்றில்லை என்று வற்புறுத்திக் கூறுகிறார்.

அடுத்த குறளில் இன்னும் ஒரு படி அதிகமாகக் கூறு கிறார். என்ன அது?

அறச்செயல் ஆக்கந் தரும்; மற்றையது கேடு தரும். அறத்தின் இயல்பே அதன் சிறப்பு. அதற்குள்ள தனிச் சிறப்பு யாது? மனமாசை களையும் அறம், அதற்காக, அதற்கு ஊறாக உள்ள பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய குறைகளை விரட்டும்; அறவே ஒழித்துக் கட்டும்.

இவ்வளவு நலன்களைப் பயக்கும் அறத்தின் ஆதாரம் எது? அறச்செயல். இன்றியமையாதது அறச்செயல். இதில் ஈடுபட வேண்டும். இதை எவ்வளவு அழகாக வள்ளுவர் இரண்டே வரிகளில் மிகச் சுருக்கமாக, ஆனால் திட்டவட்ட மாகக் கூறுகிறார்! அதைப் படிக்கிறோம்; வியக்கிறோம். உண்மையை உணர்கிறோம்,

செய்யத்தக்கது அறமே. விடத்தக்கதோ பழியே. எனவே இயன்ற அளவு அறவினை செய்க என்று செவ்விய அவ்வழியை சுட்டிக் காட்டுகிறார்.

34