பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே எல்லாம் அறவழியே வருதல் வேண்டும். எல்லா வற்றிலும் அறம் நிலவுதல் வேண்டும். எனவே ‘அறத்தால் வருவதே இன்பம்’ என்றும் வாழ்வுக்கு இன்பம் மிக மிகத் தேவை என்றும் இன்பத்திற்கு அடிகோலுவதே பொருள். பொருள் இல்லையெனில் இன்பம் இல்லை.

இக்கருத்தை கலித் தொகையிலும் காண்கிறோம்.

‘பொருளில்லான் இளமை போல’ என்கிறார் புலவர். அறம் இல்லா இன்பம்

‘இன்பததிடை அறம் இன்றேல் முதன் முதலில் தாய்மை கெடும். தாய் கெட்டால் பெண்மை கெடும். அதனால் ஆண்மையும் கெடும். பெண்மையும் ஆண்மையும் கெட்ட இடம் பேய்மைக்கு இரையாகும். இது திண்ணம். பலவித நோய்கள் தாண்டவமாடும்.’’

நோய்கள் நல்ல பிள்ளைகளை ஈனச் செய்யுமா?

வளமில்லா பிள்ளைகளைப் பெறுவதால் என்ன பயன்?

இது ஒரு பேறா?

ஒரு நாட்டின் நிலை தாய்மைப் பண்பைப் பொறுத்து நிற்கும். தாய்மைப் பண்பு அழிந்தால் நாடு அழிந்து போகும். தாய்மைப் பண்பைக் காப்பது, காக்க வல்லது இன்ப அறமேயாகும்,

எனவே அறத்தின் வழி இன்பம் நுகர்ந்தால் தாய்மைப் பண்புக்குக் கேடு நேராது. தாய்மை தூய்மையைக் காத்தாலன்றி உலகம் ஆ க் க ம் பெறாது. இத் தூய்மைக்கு என்ன வேண்டுய்? அற இன்பமே வேண்டும்.

ஆகவே தான் உலகம் நலம் பெற, உள்ளம் தெளிவாக, தாய்மை தூய்மை காக்க ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்றார் வள்ளுவர்.

36