பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செலுத்தி வாழ்வது இல்லறத்திலிருந்து இயற்கையன்பு செலுத்துவது வளர்கிறது. எனவே வாழ்க்கைக்கு அமைப்புத் தேவை. அந்த அமைப்பே “இல்” என்பது. அறத்துடன் கூடிய ‘இல் இல்லறமாகிறது.

இல்லறத்திலே மனைவி மக்களுடன் வாழ வாழ, ஒருவன் மனமாசு சிறிது சிறிதாக அகலும்; அன்பு:பெருகும். தன்னலம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பரநலத்திற்கு இடங் கொடுக்கும். உலகமே ஒரு குடும்பமாகத் தோன்ற ஆரம் பிக்கும். உலகில் வாழும் அனைத்து உயிரும் சோதரமாகப் பொலியும். எனவே இயற்கை உலகிடம் செந்தண்மை பூண்டு வாழ்தற்கே, இல்லறமே அஸ்திவாரம்.

இவ்வதிகாரம் நான்கு விதப் பொருளடக்கத்தை உடையது

1. அறமே இல்வாழ்க்கை என்பது,

2. அறத்திற்கும் இல்வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது இரண்டாவது பகுதி.

மூன்றாவதாக இல்வாழ்பவனின் கடமையைப் பற்றிக் கூறுகிறார் பொய்யா மொழியார்.

இல்லறத்திலே வாழ்பவனுடைய மாண்பு-அடுத்து வரும் பொருள்.

மனமொத்து ஒருவனும் ஒருத்தியும் வாழும் போது, அவர் மன மாசு அகலும். பிறர்க்கென வாழும் இயல்பு ஏற்படும்; இந்த இயல்பினால் அவர்தம் கடமையை அவர் உணர்வர்; தொண்டாற்றுவர். இந்த அறச்செயல் பரந்து விரிந்து அவர்கள் புகழைப் பரப்பும்; அறத்தை வலியுறுத்தும். இதன்படி முதல் குறட்பா அறமே இல்வாழ்க்கை எனக் கூறும்.

அடுத்த மூன்று பாக்களும் அறத்துக்கும் இல்வாழ்க் கைக்கும் உள்ள தொடர்பை விளக்கும்.

39