பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் குறள் பொது வாழ்வில் இல்வாழ்வான் செய்ய வேண்டிய கடமையைச் சொல்லும்.

இதுவன்றி, சிறப்பான முறையில் இல்லறத்து வாழ்வான் ஆற்ற வேண்டிய கடமைகள் எவை என அடுத்த நான்கு குறட்பாக்களும் கூறும்.

ஒன்பது, பத்து குறட்பாக்கள் இல்வாழ்வான் மாண்பை விளக்கும்.

முதல் குறளை எடுப்போமா?

‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயி னன்று

அறம்

இல்வாழ்க்கையே அறம். ஏன்? அறம் எனப்படும் மனத்துக்கண் மாசிலாதாகும் நிலையை இல்வாழ்க்கை நல்கும். இல்லற வாழ்க்கை இதை நல்க வேண்டுமானால் அறம் சார்ந்ததாகயிருக்க வேண்டும். நுட்பமான அறத்தின் பருமையே இல்வாழ்க்கை.

இல்வாழ்க்கையே நல்வாழ்க்கை

பிறவியில் அமைந்துள்ள மாசு எப்படி நீங்கும்? தனித்து வாழ்ந்தால் நீங்குமா? நீங்காது, நீங்காது இயற்கையோடு இசைந்த இல்லற வாழ்விலன்றி மாசு ஒருநாளும் நீங்காது. இது உறுதி, உறுதி, உறுதி மனமொத்த ஆணும் பெண்ணும் அறத்தின் அடிப்படையில் வாழும் போது, சேர்க்கையில் அன்பு பெருகும்; அன்பு பெருகுமிடத்தில் மாக மறையும்; தன்னலம் வீழும்; பிறநலம் பெருகும்.

தியாகம்

பரந்த அன்பு விரியும்; பெருகும்; தன்னலத்தை அழிக்கும். முதன்முதலில் மனைவியிடம் மட்டும் அன்பு

40