பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செலுத்திய ஒருவன், பிள்ளை பெற்றவுடன், அந்தக் குழந்தையிடமும் அன்பைப் பொழிகிறான். எனவே, தான், தன் மனைவி என்ற சுயநலம், குறைந்து, கொஞ்சங் கொஞ்ச மாகத் தேய்ந்து அறவே மறையும். சுயநலம் மறையும் போது தியாகம் ஆரம்பிக்கும்.

தியாக சிந்தை விருந்தோம்ப உந்தும். விருந்தினரி யார்? சுற்றமும் தெரிந்தவர்களும் மட்டுமா? இல்லை. இல்லை! தாம் அறியாதவர்; முன்பின் தெரியாத புதிய நபர்-இவரே விருந்தினர் எனப்படுவர். விருந்து என்றாலே புதிது என்று பொருள். விருந்தினரை மகிழ்விப்பது எப்படி? இன்சொல் லால்,

இதைக் கருத்திற்கொண்டே திருவள்ளுவர் அதிகாரங் களை அடுத்தடுத்து வைத்தார் போலும்!

அஃதும்

அஃதும் என்ற சொல்லை ஏன் திருவள்ளுவர் இங்கு கையாண்டார்? தம் காலத்தில் புகுந்த போலித் துறவு அல்லது தனிவாழ்க்கையைக் கண்டிக்கவே இந்தச் சொல்லை உபயோகித்தார். இல்வாழ்க்கை-ஒரு தொடர் நிகழ்ச்சியே!

கற்க வேண்டியவைகளை ஒரு பெண்ணும் ஆணும் கற்று கேட்டு அறிய வேண்டியவற்றை அறிந்து காதலால் ஒன்று பட்டு, பின்னர் மணம் புரிந்து வாழ்கின்றனர். ஒன்றாக வாழ்தலில், மனமாக அறுகிறது. பின், மெல்ல மெல்ல அறநிலைப் பேறு எய்துகிறார்கள். இந்தத் தொடர் நிகழ்ச்சியே இல்வாழ்க்கை.

துறவு? தவம்!

துறவும், தவமும் வீட்டை விட்டு ஒட வேண்டும் என்று

வற்புறுத்தவில்லை. துறவு காட்டில் தான் முடியும் என்பதும் இல்லை. தவத்திற்கு தனிமை மிக முக்கியம் என்று கண்டிப் பாகக் கூறப்படவுமில்லை!

41