பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழியில் நிலையாகத் துணை நிற்பான். இதுவே அடுத்த குறளின் கருத்து.

எட்டாவது குறளில், வள்ளுவர் இல்வாழ்வான் எப்படி நீத்தார்க்கும், உலக இன்பம் நுகர இயலாதார்க்கும், இரந் தார்க்கும் துணையாவான் என்பதைத் தெளிவுபடுத்து கிறார்.

இல்வாழ்வானுக்கு இன்னும் சிறப்புகள் உண்டோ? உண்டு, உண்டு!

இல்வாழ்வான் என்பவன் தென் புலத்தார். தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐவர் வாயிலாக அறத்தை வளர்த்தலே, சிறப்பு.

இல்வாழ்வான் மாண்பைப் பற்றிக் கூறும் மற்ற குறள்கள் இல்லற வாழ்க்கையே தலையாய வாழ்க்கை. அந்த வாழ்க்கைக்குத் தேவை முயற்சி; அந்த முயற்சியின் முதிர்ச்சி இல்வாழ்க்கையில் தெய்வத் தன்மை பொலியச் செய்யும். தெய்வத்தன்மை நற்பலனை நல்கும்; இல்வாழ்பவன் தேவருள் ஒருவனாக கருதப் படுவான்.

திரு. வி. கவின் விளக்கத்தைப் படித்தப்பின் செயற்கை வாழ்க்கை பற்றி யாரேனும் சிந்திப்பாரோ? வாழ்க்கைத் துணை

இல்லறம் செவ்வனே அமைய வேண்டுமானால், நல்ல தொரு வாழ்க்கைத் துணை அமைய வேண்டும். நல்லதொரு வாழ்க்கைத் துணை எத்தகைய சிறப்புப் பெற்றிருக்க வேண்டும் என்பதை விளக்கும் இந்த அதிகாரம். எனவே

இல்லறத்திற்கு (இல் வாழ்க்கை) பின் வருவது எவ்வளவு பொருத்தம்!

இந்த அதிகாரத்தின் முதன் குறட்பாவே நல்ல வாழ்க்கைத் துணை சிறப்புத் தன்மைகளை விளக்கும்.

44