பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இட்டுக் தொட்டுங் கவ்வியுங் துழந்தும்

கெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல்.’

கூழ் என்பது உணவைக் குறிக்கும்.

தம் மக்கள்

ஆசிரியர் தம் மக்கள் என்றதேன்? தானே ஈன்ற மக்களின் ஆடல் பாடல், குறும்பு, சேட்டை இவைகளில் பெற்றோர்க்கு எல்லையில்லா இன்பம் உண்டாவது இயற்கை. தம் குழந்தைகள் தொல்லை, இன்பம் தரும்: வெறுப்பைத் தராது. எனவே தம் மக்கள்’ என்றார். குழந்தை, இருவர் காதலின் விளைவு.

அவ்வுருவற்ற இருவரின் காதல் உயிராக உருப்பெற்று, குழந்தையாக உயிர்பெற்றது. கரை கடந்த அன்பின் சாட்சி தம் குழந்தை. ஆகவே ‘தம் மக்கள் தம் மக்களே!’

இன்ப வீடு

இல்வாழ்க்கையில் இன்பம் இடையறாது அளிப்பது குழந்தையே. இந்த அன்பு, தன் இல்லத்தில் மட்டும் அன்றி. மற்ற மக்கள், மற்ற உயிர்கள் ஆகியவற்றிற்கும் பரவச் செய்யும். இதுவே உலகை இன்ப மயமாக்கும். இன்ப வீடாக்கும். இதுவே மக்கட்பேற்றின் தலையாய சிறப்பு.

சிறு கை

குழந்தையின் கை சிறியதாகத்தானே இருக்கும். அதைக் கூடவா விவரிக்க வேண்டுமென சிலருக்குத் தோன்றலாம், குழந்தையின் கை அழகானதுதான்; சிறியதுதான்; அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதே கையின் அழகு பன் மடங்காகத் தெரியும், எப்போது? கூழை அளவளாவும் போது. கொஞ்சம் அதையும் ரசிப்போமே! பிஞ்சுக் கை. சின்னஞ்சிறு கை, அச்சின்னஞ்சிறு கையில் வழிந்தோடும் கூழ்! அந்த அழகுக் கையின் விரல்களின் அமைப்பு இன்னும் எவ்

51