பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்த குறளைச் சற்று ஆராயலாமா?

‘அன்பினும் ஆர்வம்முடைமை அதுவினும்

கண்பென்னும் காடாச் சிறப்பு.’’

அன்பு விருப்பத்தையும், விருப்பம் நட்பையும் தரும். எவ்வாறு?

அன்பு அகத்திலிருப்பது, அது படிப்படியாக வளர்ந்து, எங்கும் எல்லோரிடமும் பரவும் தன்மைத்ததாக வேண்டும். முதலில் அன்பு ஆர்வமாக அரும்பும். பின்னே நட்பாக மலரும். விதை முளையாகிச் செடியாகி, மரமாகி, அரும்பாகி, மலராகிப், பிஞ்சாகிக், காயாகிக், கனியாகி உலகிற்கு முறைமுறையே பயன்பட்டு மீண்டும் பலப்பல விதைகளாகிக் கூர்ந்து பெருகுவது போல, அன்பும் மக்களின் அகத்தில் தேங்கி விருப்பமாகி, வேட்கையாகி காதலாகி, நண்பாகி, அந்தண்மையாகிக் கூர்ந்து பெருகி, மீண்டும் அன்பாகிப் பெருகுதல் இயல்பு விருப்பம், வேட்கை, காதல், நட்பு முதலியன அன்புக் கூறுகள். இதையே சேக்கிழாரும் ஊர்ஜிதப் படுத்துகிறார். ‘முன்பு செய் தவத்தின் ஈட்டம்’ என்றார் கண்ணப்பர் வரலாறு (பெரிய புராணம்) :

ஆர்வமும் நண்பும்

அன்பு ஆர்வத்தை ஈனும், ஆர்வம் அன்பை ஈனும். ஆர்வம் அன்பின் சிறு கூறு. அது வளர்ந்தவுடன் நண்பாகும். நட்பு அழுக்காறு, வெகுளி, பகை முதலியவற்றைக் கடந்தது. அன்பு இந்நிலை அடையும்போது எவ்வுயிர்க்கும் செந் தண்மை பூண்டொழுகும் சிறப்புப் பெறும்.

இது பற்றியே நண்பென்னும் நாடாச் சிறப்பு’ என்றார் வள்ளுவர்.

  • திரு.வி.க திருக்குறள் விரிவுரை-அறத்துப்பால்,

பக். 6.61,

56