பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பில்லாவிடின் என்னாகும்? அன்பின்மையின் கொடுமையே, இந்த அதிகாரத்தின் நான்காவது பகுதி கடைசி குறள் இதுபற்றி கூறுவதே.

அன்பைக் காண முடியாது. செயல் மூலம் உணரலாம். அன்பை உணர்த்தும் வாயில்கள் சிலவுண்டு. அவைகளுள் சிறந்தது ஒன்று கண்: அது சிந்தும் கண்ணிர் அன்பு நெகிழ்ச்சியால் தோன்றும்.பிறர்க்குதவும்போதும் தோன்றும். இது பயன் கருதா உதவியாக மாறும். தியாகம் தோன்றும். இத்தகைய அன்பு பெருக்குக்கென்றே மனித உடல் வழங்கப் படுகிறது. அன்பு பெருக்குக்கு இலக்காகாத உடல் உயிரற்றது. தோலின் பாவை; இது வற்றல் மரம்.

அன்பு அறவழியிலும்பெருகும்; மறவழியிலும் பெருகும். அறவழி நடந்து மறவழியைக் கடிதல் நல்லது.

பத்தாம் குறளில் அன்பின்மையின் கொடுமை உரைக்கப் பட்டுள்ளது. அன்பு வளர்ச்சி எப்படி அறத்தின் வழியும் மறத்தின் வழியும் நிகழும் என்பதை இக்குறளிலிருந்து அறிவோம். அறத்துக்கும் மறத்துக்கும் அன்பே துணை!

பேராசைக் காரணமாக அறவழி அன்பு தம் மக்களிடம் செலுத்தும் ஒருவன், பிறர் பொருளைத் தன் முன்னேற்றத் திற்காகக் களவாடுவது தவறு. இது மறவழி. இதைத் தவிர்த்தே ஆக வேண்டும்.

அன்பிலாதாரை அறம் என் செய்யும்?

அன்பில்லாத மக்களை அறக்கடவுள் ஒறுக்கும். எப்படி? என்பிலாத உயிரை வெயில் சுட்டெரிப்பது போல்,

அறத்தின் வலிமை அதிகம். அறத்திற்கு மாறுபட்டு நடந்தால் துன்பம் அலை அலையாய் வரும் என்பதற்கு இக்குறளே சான்று.

அன்புடைமையின் வலிமைதான் என்னே!

57