பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறையும்; மனம் சுருங்கும்; இது வெளியே காண முடியாது. ஆனால் உடனுக்குடன் புலனாவது முகத்தின் குழைவே.

விருந்தோம்புவோர் முகத்திரிவு எத்தகையது? வெங்கதிர் பொழியும் கடும் வெயில் போன்றது. அது விருந்தினர் மனத்தைச் சுடும்; அகக்குழைவை ஏற்படுத்தும். அன்போடு விருந்தினரை உபசரிக்க முதலில் மிகத் தேவையானது முகமலர்ச்சி. அது போதுமா? போதாது. அவர்களை இனிய சொற்களால் வரவேற்க வேண்டும். இவை இரண்டுமே விருந்தோம்பலின் பண்புகள்.

விருந்தோம்பாமையின் இழிவு

விருந்தோம்பலின் முக்கியத்துவமும் செய்யும் முறையும் விளக்கப்பட்டன. கட்டாயமாக விருந்தோம்ப வேண்டும் என்ற சட்டமில்லையே. அப்படி விருந்தோம்பாவிடின் என்னாகும்?

விருந்தோம்பாதrர் இவ்வுலகில் வறியராய் வருந்துவர். இதை மறைக்க பற்றற்றவர் போல் நடிப்பர்; எதிலும் தமக்கு விருப்பமில்லை என்று சொல்லித் திரிவர். இதைக் காட்டிலும் வேறு நடிப்பு உண்டோ?

ஆக, செல்வத்திற்கு, அழகு விருந்தோம்பல்; இதைச் செய்யாவிடின் அவர்கள் மூடராவர். கண் உடையவர் ஆயினும் குருடராகக் கருதப்படுவர்.

விருந்தோம்பலின் பயனிலை

விருந்தோம்பலின் பயன் அதற்குச் சமமாக இருக்கும். குறையவே குறையாது. விருந்தோம்பலை அளந்து அதன் பலனுடன் ஒப்பிட முடியுமா?இது அடுத்த கேள்வி. முடியாது, (1914-turf 5, 1

ஆனால் ஏற்படும் பயன் நாம் செய்த விருந்தோம்பலின் தன்மையைக் காட்டுவதாக அமையும். விருந்தோம்பலும்

62