பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் இருமை இன்பம் கிட்ட இன்சொல் எத்தகையதாக யிருக்க வேண்டும்?

அது சிறுமையற்றதாக இருக்க வேண்டும். வன்சொல் கூடாது

இன்சொல் விடுத்து வன்சொல் மொழிவது சரியா? இல்லை, இல்லை; நிச்சயமாக தவறு. இன்சொல் இன்பம் பயக்கும். இதை ஒருவன் உணர்வான்; தெளிவும் கொள் வான். அப்படியிருக்க வன்சொல் வழங்குவனோ? (வழங்க மாட்டான்).

இனிமையை விடுத்து இன்னாததைக் கொள்வானோ அறிவுடையவன்? மாட்டான். இனிமையை விடுத்து இன்னாததைக் கொள்ளல் அறியாமை என்று ஒதுக்குவான். ஏன்? வன்சொல் கொடுமை உள்ளதால், அதை ஒதுக்கு வான். அப்படியும் ஒருவன் வன்சொல் கையாள்வது எதனை ஒக்கும்?

“கனியிருப்பக் காய் கவர்ந்தற்று அதாவது ‘நல்ல கனிகள் இருக்கும்போது காய்கள் கைக்கொள்வதை ஒக்கும்.’

மக்கள் இன்சொல் வழங்கிப் பேறு பெறவே படைக்கப் பட்டார்கள். அவர்கள் படைப்பு நோக்கின், இயற்கைக்கு மாறுபட்டு இன்னாசொல் வழங்குவது முறை யல்ல அப்படியும் நெறியற்று வழங்குவோர் நெறியற்ற கள்வர் என்று கூறுவது பொருத்தமாகும் என்கிறார் திரு. வி. க.

எனவே நல்லதே நினைக்க! நல்லதே செய்க. நல்லன. பேசுக , தீயன தவிர்க்க. என்று அறிவுரை வழங்குகிறார் தமிழ்த் தென்றல் திரு. வி. க.

அலை பாயும் மனத்திற்குத் திருக்குறள் காட்டிலும் ஒரு சிறந்த மருந்துண்டோ இவ்வகையத்தில்!