பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வுயிரும் நீங்காதுறையும் இறை சிவனென்று எவ்வுயிர்க்கும் அன்பாயிரு

சைவ சமய நெறி.*

சைவர்களாக வாழ்ந்த நாயன்மார் வரலாற்றில் என்ன காண்கிறோம். அவர்கள் சாதி மதம் பாராட்டவில்லை என்று உணர்கிறோம். பிற உயிர்களிடம் அன்பு கொண்டு, அவைகளைப் பாதுகாத்து வந்ததையும் அறிகிறோம். சைவ ஜீவகாருண்ய மதம். கொல்லா விரதம் கொண்ட வரே சைவர்,

‘இயற்கை, சிவனின் ஒரு பகுதி.ஏன், இயற்கையே சிவன். அதில் வாழும் ஒவ்வொரு உயிரும் சிவனின் அங்கமே. இயற்கை வடிவங்களைக் கொண்டே இறையுண்மையை அறிதல் வேண்டும்.’**

யாண்டும் நிறைந்துள்ள ஒருவனே இறைவன். அவனை எப்பெயர் கொண்டு அழைத்தாலென்ன? ஜெஹோவா, அல்லா, ஏசு- எல்லா பெயரும் ஒன்றையல்லவா குறிக்கும். எந்த ஒன்றை?

நீக்கமற நிற்கும் ஒரே கடவுளைக் குறிக்கிறது. அவன், “நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்’

அப்பர் (நினைப்பவர் மனம்-பக்கம் 5)

அடுத்த ஐயம். அண்டமெலாம் வியாபித்திருக்கும் கடவுளை திருவுருவம் மூலம் வழிபடலாமா? நாம் வாழ்

  • சைவ சமய சாரம்.
  • சைவத் திறவு-பக். கூகூ

டக் 83 - உள்ளொளி - உள்ளுணர்வும் வழிபாடும் இதே கருத்து, பக் -52-சித்த மார்க்கம். ‘சிவம் அங்கிங்கெனாதபடி பிரகாசமாயிருப்பது. சிவம் இல்லாத இடம் இல்லை எவ்வுயிர்க்கும் உயிராயிருப் பது சிவம் சிவம் எல்லா உயிரிலும் இருத்தலால் எல்லா உயிரும் சகோதரம் என்பதில் ஐயமில்லை.

70