பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் கடவுள்

முருகு, கந்தழி என்று முதல் முதல் கடவுளை அழைத்தனர். பின்னர் சிவன், திருமால் போன்ற எத்தனையோ பெயர்களை மனிதன் ஆண்டவனுக்குக் கொடுத்தான். இத்தனைப் பெயர்களிலும் இருந்தவன் ஒரே இறை. எனவே பன்மையில் ஒருமை காண்பதே அறிவு.

சமயங்கள் எத்தனை, எத்தனை!

எத்தனையோ சமயங்கள் கொண்டது தமிழ் நாடு. இந்து, சமணம், புத்தம் ஆகியன. சமணம் அகிம்சையையும், புத்தம் கருணையையும் போதித்தன. சமணமும் புத்தமும் துறவற வாழ்க்கைக்குச் சிறப்புக் கொடுத்தன. துறவற மாவது இயற்கைக்கு மாறான செயற்கை வாழ்க்கை. சைவத்தில் இறைவனே இயற்கை. இறைவனின் உடலா .ெ இயற்கையோடு இசைந்து வாழ வேண்டுமானால் பென துணை தவிர்ப்பது மதியீனம். பெண் மாயை அல்ல என்று வலியுறுத்தியது ஏன், நாயன்மார், அனைவரும் இல்லறத்தில் வாழ்ந்தவர் தானே?

சமரசத்தில் உயர்ந்தோர்க்கு தாழ்ந்தோர் உழைத்தல், கைமாறு பாராத பணி, தலையாயன. அது மட்டுமா? உண்மையான சன்மார்க்க நோக்குடையவர் பிறப்பு வேற்றுமை பாராட்ட மாட்டார். எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பேணுவர்: முறையிட்டால், உள்ளமுருகி, குற்ற முணர்ந்து முறையிட்டால், நிச்சயம் பாவ மன்னிப்பு உண்டு. இவையனைத்தும் தன்னிடத்தே கொண்டது சன்மார்க்கம்.

இது மட்டுமா? சைவம் சீவகாருண்ய மதமானதால் பிறரைத் தொல்லை கொடுக்கும் செயல்களை மனத்தாலும் நினைக்காது; செய்யவும் செய்யாது. பிறர் குற்றங்களைப் பாராட்டாது புறங்கூறலைத் தவிர்க்கும். எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாத அருள்நெறியே சைவம். ஆகவே இதனை சமரச சீவகாருண்ய சமயம் என்று அழைத்தால், தவறாமோ? ஆகாது, ஆகாது!!