பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்துப் பற்றியே தமிழ் மக்கள் முழு முதற் பொருட்டு ஆறுமுகங் கூறினர் போலும்!

இந்த ஷடாந்தத்தில் விளங்குவது சமரச சன்மார்க்கம். ஆணவமற்ற ஒரு நிலையை இராமலிங்க அடிகள் போதித் தார்.*

இந்த சன்மார்க்கம் சமரசத்திற்கு அடிகோலும்: சமரசம் எப்போது வரும்? மனிதன் பாலுள்ள அழுக்காறு அவா வெகுளி முதலியன விரட்டப்படும் போது. எத்தனையோ காலமாக இத்தீய சக்திகள் உள்ளனவே! அவைகளைப் போக்குவது எப்படி?

சமரசம்-வழிகோலுவது எவ்வாறு?

சமரசம் பெருக வேண்டுமானால் மனிதன் தன் நாட்டுப் பற்றை பிற நாடுகளைப் பாதிக்காத பற்றாகக் கொள்ள வேண்டும், அவனுக்கு மொழிப் பற்றிருக்கலாம், அதில் தவறில்லை. ஆனால், அது மொழி வெறியாதல் கூடாது. அவனது சமய உணர்வு கட்டுக் கடங்கி, பிற சமயங்களை வெறுக்காததாக அமைதல் வேண்டும். பிறப்பின் அடிப் படையில் பிறந்த சாதி வைத்து, மாந்தரிடையே உயர்வு தாழ்வு கற்பிப்பது அறிவுடைமை ஆகாது. அவ்வாறு செய் தால் அது ஒரு மாபெருங் குற்றம்.

சமரசம் ஏன்?

சமரச சன்மார்க்கத்தில் ஒளிவடிவான கடவுளை எவரும் காணலாம்.

‘எச்சமயத்தவரும் வந்திறைஞ்சா நிற்பர்’

(தாயுமானார்), எதற்காக இவ்வாறு சொன்னார்? சிதம்பரத்தின் பொது மையக் குறித்து இவ்வாறு கூறினார் தாயுமானார்.

  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், பக். 28.

8.2